உன் கரம் முதலில் கவிதை பிறகு

கவிதையொன்று எழுதலாமென
கருவொன்று தேடினேன்...
நீ கிடைத்தாய்...
உன்
முகவரியைத் தேடுகிறேன்...
பிறகென்னடி?-உன்னை
அதுவென்றும் இதுவென்றுமென
உவமை கூறி
ஒப்பிலக்கணம் பாடிச்செல்ல
ஒப்பவில்லை என் மனம்...
உன்
கரம், முதலில்…
கவிதை, பிறகு…

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (3-Nov-18, 2:35 am)
பார்வை : 170

மேலே