பேரழகி

பேரழகி !

பேரழகி !

நான் இதுவரை கண்ட பெண்களிலே ...

குரலழகி !

குரலழகி !

நான் இதுவரை கேட்ட‌ குரல்களிலே ...

கண்ணழகி !

கண்ணழகி !

அவள் பார்வையில் யாவும் பிறக்கிறதே ...

என் அழகி !

என் அழகி !

என் இதயம் திருடிய தமிழ் அழகி ...

பார்வையில் காந்தமோ ?

அவள் அழகால் உலகம் எங்கும் சாந்தமோ ?

ஆரடி அங்கமோ ?

அவள் அழகால் கவிதை பொங்குமோ ?

தேவதை நகலோ ?

இல்லை தேவனின் மகளோ ?

பூக்களின் நிழலோ ?

இல்லை பூமியில் நடக்கும் பொன்மகளோ ?

அழகின் வழியோ ?

இல்லை அழகை ஆளும் அரசியோ ?

கம்பன் வரியோ ?

இல்லை கண்ணை திருடும் கள்ளியோ ?

தீரவில்லை ஐயமே !

அவள் அழகில் பிரம்மனும் பித்தனே !

அவள் சிரிக்கும் அந்த சிரிப்பிலே !

சிற்பம் கூட அவளை ரசிக்குமே !

அவள் தூரிகை கொண்ட தலையை தாங்க என் மடியும் தலையணை ஆகும் !

அவள் சாலையில் நடக்க மறந்துவிட்டால் பூக்களும் ஏங்கி வாடிப்போகும் !

நிலவு பிளவுப் படும் அவள் இரவில் உறங்கவில்லையென்றால் !

வெயிலும் தன்னை வெறுத்துவிடும் அவள் முகத்தில் வியர்வை வந்துவிட்டால் !

அழகியே !

அழகியே !

இயற்கை விரும்பும் அழகியே !

அழகியே !

அழகியே !

என் இதயம் திருடிய இறைவியே ! ...

எழுதியவர் : M. Santhakumar . (3-Nov-18, 6:14 am)
சேர்த்தது : Santhakumar
Tanglish : peralagi
பார்வை : 2797

மேலே