அடையாளி

மனநிலை பாதிக்கப்பட்டவரு மாதிரி வர்றாரே அவுரு யாருடா?

அவருதான்டா அடையாளி.

அடையாளியா? என்ன, அடை சுட்டு விக்கறவரா?

டேய் அவர சாதாரணமான நெனச்சறாத. எங்க தொகுதில அவரத் தெரியாதவங்களே கெடையாது

அவரப் பாத்தா அப்பிடித் தெரீலியே?


அப்பிடிப்பட்ட ஆளுத்தான்டா எங்க கட்சிய செயிக்க வைக்கறாரு.

எப்பிடி?

தேர்தல் நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒவ்வொரு வீட்டுக்கும் போயி அடையாள அட்டை (token)
குடுப்பாரு. செயிச்சதுக்கப்பறம் எல்லாம் தூங்கற நேரத்தில ஒவ்வொரு வீட்டு கொல்லைப் புறத்தில போயி வாக்காளர்களுக்குத் தரவேண்டியதை ஒரு நெகிழிப் (Plastic) பையில கட்டி வீசிப் போட்டுட்டுப் போயிருவாரு. இவுரு மனநிலை பாதிக்கப்பட்டவரு
மாதிரி இருக்கறதால பறக்கும் படைகூட இவரச் சந்தேகப்படறதில்லை. இப்ப இவுரோட அழகப்பன்ங்கற பேரு 'அடையாளி'ன்னு ஆயிருச்சு.

வாக்குக்கு பணம் குடுத்து செயிக்கறது வெக்கக் கேடுடா. அதுக்கத்தான்டா நான் எந்தக் கட்சிலயும் சேரல.

எல்லாம் மாறிப் போச்சுடா நண்பா.

எழுதியவர் : மலர் (3-Nov-18, 1:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 94

புதிய படைப்புகள்

மேலே