பயம் என்ற பேய்

" உன் தங்கச்சிக்கு பேய் பிடிச்சிருக்குடா! ",என்று கல்லூரி விடுதியில் இருந்து பல நாட்கள் கழித்து விடுமுறைக்காக வீடு வந்த ரகுவிடம் சொன்னாங்க காயத்ரி அம்மா.

" அட போமா! அந்தக் காலப் பைத்தியம் போகாமல்! ", என்றவன் தன் தங்கையைத் தேடினான்.

" டேய்! நீ சொன்னா நம்ப மாட்ட! உன் ரூம்ல போய் பாரு. ",என்றாங்க அம்மா.

தனது அறையின் கதவைத் திறந்தான் இரகு.
அங்கு தன் தங்கை கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தவன், " வர வர உங்க காட்டுமிராண்டித்தனத்திற்கு அளவே இல்லாமல் போச்சு. ", என்று தன் அம்மாவை கோபமாக திட்டிக் கொண்டே தான் தங்கையின் கை கால்களை அவிழ்த்துவிட்டான்.

" ஹேய் நிஷா! உன் வந்திருக்கேன். கண்ணைத் திறந்து பார். ",என்றான்.

கண்ணை திறந்து பார்த்த நிஷா, " அண்ணா! வந்துட்டியா? எனக்காக என்ன வாங்கிட்டு வந்த? ",என்று சகஜமாக பேசியவள், திடீரென அந்த அறையின் விளிப்பு கோணப்பகுதியை பார்த்து பயந்தாள்.

" ஹேய்! என்னாச்சு? ஏன் பயப்படுற? அங்க யாரு இருக்கா? ", என்றவாறு திரும்பினான்.

அங்கு யாரும் காணப்படவில்லை.

ஆனால் நிஷாவின் பயம் அதிகரிப்பதை அவளுடைய முகம் காட்டியது.

திடீரென எழுந்து தன் அண்ணன் இரகுவை வெளியே போகச் சொல்லி கெஞ்சினாள்.
இரகுவிற்கு நிஷாவின் நடவடிக்கை விசித்திரமாகப்பட்டது.
அவன் அவளை கவனித்தபடி நின்றான்.

நிஷாவோ ,அந்த அறையின் முக்கு கோணப்பகுதியை நோக்கி, " என் அண்ணனை ஒன்னும் பண்ணிடாத! நான் போக சொல்லிடுறேன். ",என்று கெஞ்சினாள்.

சட்டென கெஞ்சுவதை விட்டு, இரகுவை நோக்கி திரும்பினாள்.
வேகமாக வந்தவள், " வெளியே போடா. ",என்று வேகமாக வெளியே தள்ளி கதவை உள்ளப்பக்கம் தாளிட்டுக்கொண்டாள்.

இரகு தன் அம்மாவைப் பார்த்தான்.

" நான் தான் சொன்னேன்ல. அவளுக்கு பேய் பிடிச்சுருக்குனு. நீ தான் கேட்கல. ", என்றாங்க அம்மா.

" நீ சொல்லுறது உண்மை தான் அம்மா. தங்கச்சியை பயம் என்கிற பேய் பிடிச்சுருக்கு. ",என்று கூறிவிட்டு வெளியே கிளம்பினான்.

காயத்ரி அம்மாவுக்கு அவன் சொன்னது புரியவில்லை.

இரகு மனோதத்துவியல் படிக்கும் மாணவன்.
அவன் தங்கை +2 முடித்துவிட்டு வீட்டில் அம்மாவிற்கு உதவியாக இருந்தாள்.
இரகுவின் அப்பா இராமர் ஒரு விவசாயி.
அவர் வீட்டில் வாழ்ந்ததைவிட காட்டில் வாழ்ந்தது தான் அதிகம்.
காயத்ரி அம்மா படிக்காதவங்க.

இரகு வெளியே சென்ற சிறிது நேரத்தில் இராமர் வீட்டிற்கு வந்தார்.
இரகு வந்ததையும், அவன் சொன்னதையும் இராமரிடம் காயத்ரி அம்மா சொன்னாங்க.

இராமர் விவசாயத்தையே நேசிக்கிறார்.
தான் மகன் இரகுவை விவசாயம் பார்க்கவே சொன்னார்.
அவனோ சைக்கோலாஜிகல் படிக்கப் போறேன்னு சொல்லி அந்த கல்லூரியிலேயும் சேர்ந்துவிட்டான்.
அவன் விருப்பமென்று விட்டுவிட்டார்.

மாலை ஐந்து மணி இருக்கும்.
வீட்டிற்கு வந்த இரகு, குளித்துவிட்டு, ஆடை மாற்றி அணிந்து கொண்டு, நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, தன் தங்கையின் அறைக் கதவை மெல்லத் தட்டினான்.
கதவு திறந்து கொண்டது, அதாவது வாசலில் சாத்திவைக்கப்பட்டிருந்த கதவு உள்நோக்கி நகர்ந்தது.

அறை முழுவது சற்று இருட்டாக இருந்தது.
மின் விளக்கு சுவிட்ச் ஆன் செய்யப்படாமல் இருந்தது.
சுவிட்ச்சை தேடிப்படித்து ஆன் செய்தான்.

விபூதியைக் கையில் எடுத்தவன் தங்கச்சியின் நெற்றியில் பூசினான்.
பிறகு சமையலறை சென்று உணவை தட்டில் எடுத்து வந்தான்.
தன் தங்கைக்கு ஊட்டிவிட்டான்.

நிஷாவின் முகத்தில் சற்று தெளிச்சல் காணப்பட்டது.
உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிய,
தட்டில் கையை இரகு கழுவ, காயத்ரி அம்மா வந்து தட்டை வாங்கிக் கொண்டு சென்றாங்க.

சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் அப்படியே தன் அண்ணன் மடியில் தலை வைத்து படுத்தாள்.

சற்று நேரத்தில் தூங்கிப்போனாள்.

அவள் நல்லா முழு தூக்க நிலைக்கு சென்ற பிறகு, இரகு தான் கற்ற வித்தையை பரீசித்து பார்க்க எண்ணி, தன் மனதை அமைதி நிலைக்கு கொண்டு சென்று தன் தங்கையின் ஆழ்மனதில் கூறினான்.
" நீ பயப்படாமல் இருந்தால போதும்.
அந்த பேயால் ஒன்றும் செய்யமுடியாது. ", என்று அழுத்திக் கூறி அவள் மனதை நம்பச் செய்தான்.

அன்றிரவு நிஷா நன்றாக உறங்கினாள்.
காலையில் எழுந்து வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுவிட்டு, சமையல் வேலையை செய்தாள்.
அதைக்கண்ட காயத்ரி அம்மாவிற்கு ஆச்சர்யமாகத் தோன்றியது.

அன்று காலை சாப்பிட்டுவிட்டு வெளியே சென்ற இரகு,
" ஓம் ",என்றொலிக்கும் ரேடியோவை வாங்கி வந்து வீட்டில் வைத்து ஒலிக்கச் செய்தான்.

காயத்ரி அம்மாவிற்கு அதிசயமாக இருந்தது.
நம்மிடம் டாக்டருக்குப் படிப்பதாகச் சொன்னானே.
ஒருவேளை சாமியாராகிட்டானோ என்று யோசித்தார்.

அன்றிலிருந்து நிஷா முன்பை விட சுறுசுறுப்பாகவும், தைரியமாகவும் இருக்க தொடங்கினாள்.
அவளை பிடித்திருந்த பயம் என்ற பேய் அழிந்து போனது.
அந்த பயம் அவளை மீண்டும் பிடிக்காமல் இருக்க, " ஓம் ", என்ற ஒலி அவள் காது வழி மூளையில் பதிந்துவிட்டது.
இனி அவளை பேய் பிடிக்க வாய்ப்பில்லை.

" ஓம் ", என்ற ஒலியால் நிஷாவிற்கு மட்டுமல்ல வீட்டில் எல்லோருக்குமே நேர்மறையான மாற்றங்களை மனதில் தந்தது.

எதிர்மறையான நம்பிக்கை நம்மை நெருங்காதிருக்க நேர்மறையான நம்பிக்கை நமக்கு அவசிய துணையாகிறது.
என்னை பொருத்தவரை, " ஓம் ", என்ற ஒலி மதங்களைக் கடந்தது.
இயற்கையிருந்து உருவானது.

என்னுடைய மனதை தீயவை அண்டாதிருக்கத் துணையாக தியானம் செய்ய ஏதுவாக இருப்பது இந்த " ஓம் ".

குழந்தைகளிடம் பேய்க்கதைகள் கூறி பயம் என்கிற உணர்வை வளர்பபதைவிட உன்னதமானது குழந்தைகள் மனதில் பேய் என்ற பயத்திற்கு இடமளிக்காத அளவுக்கு நேர்மறையான எண்ணங்களை நிரப்புங்கள்..
நேர்மறையான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றிகள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Nov-18, 7:40 am)
Tanglish : bayam entra pei
பார்வை : 4284

மேலே