மென்மையின் சுகம்
காதலரின் படபடக்கும் இதயமது
பட்டாம்பூச்சியாம்
அவர்களுக்கு கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்
கண்கவர் வண்ணங்களாம்
அத்தனை நிறங்களையும் உன் பட்டு மேனியில்
அள்ளித் தெளித்துள்ளாய்
காதல் வந்தால் உன் நினைப்பு ஓடோடி வருகிறது
காதலரின் இதயத்தை இனிமையாக வருடுகிறாய்
உந்தன் ஸ்பரிசம் எவ்வளவு மென்மையானது
இனிமையின் இளம் சுகம்
காதலர்க்கு நீ கொடுத்ததோ
வண்ணக் கனவினிலே காதலர்க்கு
உன் மிதமான படபடப்பு இதயத்திலே .