வெட்கம் கெட்டவர்கள்

வெட்கம் கெட்டவள் என்று
எல்லோரும் அவளை
தூற்றுகிறார்களே தவிர
அவளை விட்டு பார்வையை
அகற்றவில்லை யாரும்
அப்படியொரு வசீகரம்
அடங்காத திமிர்
மந்தகாச புன்னகை
மாம்பழகலர் சேலை என
எப்போதும் போல
எல்லோரையும் வெட்கப்படத்தான்
வைக்கிறாள் இன்றும்!!!.....................