காதல் கடிதம்
என் தேடலில் கிடைத்த
என் சுவாசக் காற்றே
உனக்கு கடிதம் எழுத
ஆரம்பித்தவுடன் என்
அறை குப்பையானது
வார்த்தைகள் தடுமாறுகிறது
எண்ணிலடங்கா செய்தியை
ஏட்டில் வடிக்க இயலவில்லை
இரு மனமும் ஒரு மனமாய்
நமக்கெதற்கு கடிதம்
நாளை ஒரு பொழுதில்
நம் நினைவுகளை
அசைப்போட்டு
நாம் ரசித்து மகிழ்ந்திட
நம் முதிர் பருவத்தில்
புதையலாய் இருக்கும்
அதற்காகத்தான்!!!!!!