காதலெனப்படுவது யாதெனின்
தக்கார் தகாரெனத்
தெளிந்து கண்கலத்தலால்
உய்யுமோ காதல்???
மண்ணோ மடுவோ
யாதெ னறியாமல் விழும்
விதை வேர்பிடித்துச்
செடியாகும் விந்தைபோல்
எப்போதோ... எங்கேயோ....
அறியாமல் இதயம் புகுந்து
இனி யாவுமாய் வியாபித்தலே
காதல்..........

