அழகோ அழகு
அழகோ அழகு
தூக்கத்தில் சிரிக்கும்
கைக் குழந்தை அழகு
பல் விழுந்த பின்
மறைக்கும் வெட்கம் அழகு
கூடிப் பேசி சிரிக்கும்
மாணவியர் ஆரவாரம் அழகு
கண் சிமிட்டிக் கேலி பேசும்
கல்லூரி மகளிர் அழகு
சீமந்த வைபோகத்தில்
சந்தனம் பூசிய கன்னம் அழகு
தாய்மைப் பேறு பெற்ற பின்
கணவனை நோக்கும் பார்வை அழகு
ஒவ்வொரு பருவத்தில்
ஒவ்வொன்று அழகு -
பிள்ளைத் தமிழ் கன்னித் தமிழ்
அன்னைத் தமிழ் என
சீர் இளமை திறம் போற்றும்
செந்தமிழ் அழகோ அழகு