சில பல்லவிகள் - 01
காதல்
உனை பார்த்தால்
என் தேகம்
உடல் கூடு விட்டு
கூடு பாயும்
நீ கடக்கும்
சில நிமிடம்
வேலை நிறுத்தம் செய்யும்
என் இதயம்
உயிரே உயிரே
ஒரு நிமிடம் உனை மறவா
வரத்தை வரத்தை
இதழ் முத்தம் இட்டு நான் பெறவா
என் வழி நெடுக்க
உன்னோட உருவம்
இருப்பதினால்
உனக்கிந்த கர்வம்
என் மனம் முழுக்க
உன்னோட நினைவு
சுமப்பதினால்
சுகமாகும் வயது
அதனால் அதனால்
( உனை பார்த்தால்)