களவும் கற்று மற தம்பி

பள்ளிக்கு செல் தம்பி -நீயும்
பாரினில் உயர்வாய் தம்பி ....!

வேற்றுமை யகற்றுத் தம்பி -வெல்லும்
வேகத்தைக் காட்டுத் தம்பி ....!

ஒற்றுமை வேணும் தம்பி -எதிலும்
ஒழுக்கமே வேணும் தம்பி .....!

வம்பு வேண்டாம் தம்பி -சொல்லும்
வார்த்தை கேளு தம்பி ......!

நேர்மை போற்றுத் தம்பி -உள்ள
நேசம் பெருக்குத் தம்பி ....!

பொறுமை கொள்ளுத் தம்பி -உந்தன்
பொறாமை நீங்கும் தம்பி ........!

உண்மை பேசுத் தம்பி -மனதில்
உறுதியை நாட்டுத் -தம்பி .......!

நன்மை செய்வாய் தம்பி -நீயும்
நன்றே வாழ்வாய் தம்பி .......!

முப்பொழுதும் உழைத் தம்பி -நீயும்
முன்னேறி செல்வாய் தம்பி .......!

அன்பின் வழிச்செல் தம்பி -உன்னை
அகிலமே போற்றும் தம்பி ........!

செல்லும் பாதையில் தம்பி -உன்னை
முட்கள் சூழ்ந்திடும் தம்பி .......!

மகிழ்ந்து ஏற்றிடு தம்பி -அதனை
மாலையாக மாற்றிடு தம்பி ......!

விவேகமாய் இருந்திடு தம்பி -உன்னை
வீரனாய் மாற்றிடும் தம்பி .......!

நல் தொண்டு செய்வாய் தம்பி -என்றும்
நலமுடன் வாழ்வாய் தம்பி ......!!!!!

எழுதியவர் : உமாபாரதி (18-Nov-18, 8:27 pm)
பார்வை : 141

மேலே