இளம் பஞ்சு மெத்தையென
இளம் பஞ்சு மெத்தையென
******************************************
நீலநிறப் பட்டுடுத்தி கோலாகல
மாய்நிற்கும் இமயத்தின் பொன்மகளே
இளம்பஞ்சு மெத்தையென இடபத்தான்
மடிதன்னில் மனங்குளிர அமர்ந்தவள்நீ
உலவுதென்றல் காற்றாக உன்கூந்தல்
சுகமளிக்க மலையோனும் மகிழ்ந்தவனே
மாலோனும் காத்துநிற்க அயனவனும்
கைகட்டி நிற்குமிடம் உன் இடமே -உந்தன்
கோலமிடும் வாசலிலே சரணடைந்த
அனைவர்க்கும் அருள்கூட்டி வைத்திடுவாய்