பிறமொழி நூலகம் சொற்சித்திரமாய் மும்பை வாழ்க்கை
நவீன மராத்தி இலக்கியத்தின் நெப்போலியன் என்று அழைக்கப்படும் கங்காதர் காட்கிலின் பல நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 14 சிறுகதைகள் கீர்த்தி ராமச்சந்திராவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. பொருளாதார ஆசிரியரும் எழுத்தாளரும் மும்பைவாசியுமான காட்கில் மும்பையின் உயிர்ப்பை, பெருமூச்சை, கோபத்தை, தாபத்தை சில நேரங்களில் கேலியாகவும், சில நேரங்களில் கசப்புடனும் தன் எழுத்துகளில் வடிப்பவர். பல்வேறுபட்ட தளங்களில் நிலவும் பரபரப்பான மும்பை வாழ்க்கையின் பன்முகத்தன்மை உயிரோட்டத்துடன் இவரது கதைகளில் வெளிப்படுகின்றன. நவீன இந்திய இலக்கியத்தில் செறிவுமிக்கப் பல சோதனை முயற்சிகளை வெளிக்கொண்டுவரும் மராத்தி மொழிக்கேயுரிய வேகத்தையும் வீச்சையும் சிறப்பாக ஆங்கிலத்தில் கொண்டுசென்றிருக்கிறார் கீர்த்தி. நவீன மராத்திய இலக்கியக் கதவைத் திறக்கிறது இத்தொகுப்பு.
எ ஃபேஸ்லெஸ் ஈவினிங் அண்ட் அதர் ஸ்டோரீஸ்
கங்காதர் காட்கில்
ஆங்கிலத்தில்: கீர்த்தி ராமச்சந்திரா
ரத்னா புக்ஸ்
விராட் பவன், டெல்லி – 110 009.
விலை: ரூ.299