அன்பு அம்மா-பையன் உரையாடல்

அம்மா (பையனிடம்) : இத பாரடா கோபால், எல்லாரிடமும்
அன்போடு இருக்கவேண்டும் , பிராணிகளிடம் கூட
அன்பு செலுத்த வாழ்க்கை, பண்பில்லா வாழ்க்கை
இதை மனதில் பாடிய வைத்துக்கொள்.....

பையன் (அம்மாவிடம்) :அம்மா இதை சொல்ல உங்க மனசாட்சி
எப்படிம்மா இடம் கொடுக்குது....தினமும்
நீ பாட்டியை திட்டி தீக்கற , சண்டைக்கு இழுக்கற
பாவம், அவங்க ஒன்னும் சொல்லாம கண்ணீர் விடுவாங்க
நீ மட்டும் ஏம்மா அவங்களிடம் அன்பு காட்டுவதில்லை ?


அம்மா (பையனிடம்) போறும், நிறுத்துடா ........ உனக்கு இதல்லாம் புரியாது
இது மாமியார்- நாட்டுப்பொண்ணு விவகாரம்
அன்புக்கு அப்பாற்பட்டது.................

பையன் : அம்மா, நீ என்னிடம் அன்பு காட்டற, உன் அம்மாவிடம்
காட்டற, ஆனா பாவம் பாட்டி, அப்பாவின் அம்மா
இந்த வயசுல அன்பு தேடறாங்க ......அவங்களிடம்
நீ அன்பே காட்டுவதில்லையே

அம்மா : அது, அது அதுவந்து அவங்க தல எழுத்துன்னு
வெச்சுக்கோ...... போடா......ஸ்கூலுக்கு லேட்டா ஆச்சு போ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Nov-18, 8:47 pm)
பார்வை : 125

மேலே