சொல்லிற் செயல்
ஆயிரம் அழிவேல்
அடிவானம் பூண்டு
எடுத்துரைத்த ஏழுகடல் சொல்லிற் செயல் அது !
அடிவான நீர்
கண்டுடைத்து கழிமுகம்
விஷம் கொண்டு செய்த சொல்லிற் செயல் அது !
ஆயிரம் மதயானை
பாதம் அழுத்தி
மனக் கொன்ற சொல்லிற் செயல் அது !
கைக் குழந்தைக்கு
கள்ளி விஷம்
கொண்டு கொன்ற சொல்லிற் செயல் அது !
கூட்டில் முட்டை
தாயறியா விழுங்கிய
ராஜ நாகமாய் சொல்லிற் செயல் அது !
கருந்தேள் விஷபுடுங்கி
அரளி விதை கலந்து
பச்சிளங் குழந்தை கொன்ற சொல்லிற் செயல் அது !
முதுமை பார்த்து
கழுத்தின் படி
அடித்து ரத்தம் குடித்து கொன்ற சொல்லிற் செயல் அது !