அவள் அழகு

பட்டு வண்ண ரோசா அவள்
பார்க்கும் விழிகள் இமைமூடா
கார்க் கால மேகம் அவள்
காற்றும் அசைய மறந்து போகும்
பால் நிலவன்ன முகம் உடையவள்
பகலவனும் குளிர்ந்து போவான்
கொடியன்ன தேகம் உடையவள்
ஓடிபடரும் பிச்சியும் தோற்றுவிடும்
யாரும் கொய்யா கனி அவள்
நெருஞ்சி முள்ளாய் தைத்திடுவாள்

எழுதியவர் : உமாபாரதி (22-Nov-18, 11:00 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : aval alagu
பார்வை : 3330

மேலே