தீபம்
~~~~~~~*தீபம்*~~~~~~
🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯
காட்டில் தவறும் சிறு பொறியில்
கானகத்தையே அழிக்கும் நீ.....
பகையாய் உன்மேல் நீர் தெளித்தால் புகையாய் மாறி வென்றெரிவாய்....
தணலாய்க் கீழே சாய்ந்தாலும்
தானாய்ப் பொறுத்து சாம்பலாவாய்......
ஆனால்....
விளக்கு நிறைய எண்ணெய் தந்தும்
வேண்டிய மட்டும் எடுத்து நீ....
நீண்ட நேரம் எங்களுக்கு
நிரந்தர வெளிச்சம் தருவதாலே...
*தீபம்* என்றே உனைக்கூறி
தீரும் போதெல்லாம் எண்ணெய் இட்டு
வானம் நோக்கி வளரும் சுடரை
வணங்கி நாங்கள் வழிபடுகின்றோம்.....
க.செல்வராசு...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏