ஒப்பாரி பாடல் கஜா புயல்

#ஒப்பாரி பாடல்
#கஜா புயல்

பார்த்து வளர்த்த மரம்
பாட்டன்பாட்டி கால மரம்
காய்கனி தந்த மரம்
காத்து கொன்னு போட்டிருச்சே…!

வாழை தோப்புயின்னும்
தென்னந் தோப்புயின்னும்
தேக்கு மரத்த கூட
வேரோடு சாச்சிடுச்சே..!

ஆடு மாடு கோழியின்னு
அழகழகா வளத்தோமே
அத்தனையும் காணலியே
எத்தனய்யா இப்புயலே. !

கஜான்னு பேரு வெக்க
கஜ முகத்த காட்டிடிச்சி
மதம் புடிச்ச யானையாட்டம்
வதம் செஞ்சி போயிடிச்சி..!

ஆறு தண்ணி பாழு தண்ணி
அங்கங்கே சேறு தண்ணி
தாகமாத்த தண்ணியில்ல
கண்ணீரு வழியுதல்லோ…!

ஒதுங்கி நிக்க கூரையில்ல
உக்கார எடமும் இல்ல
நீச்சங்கொண்டு வந்த காத்து
நிர்க்கதியா ஆக்கிடிச்சே…!

படமெடுக்க வந்த பய
உணவெடுத்து வாரலயே
காசு பணம் காணுதற்கோ
எங்க கண்ணீர் ஆகிடிச்சி…!

ஓட்டுவாங்க பாட்டுப்பாடி
ஓயாது வந்த பய
நாண்டுகிட்டு சாஞ்சிட்டானோ
நா வறண்டு கூவுறமே..!

பாலுக்கழும் குழந்தை போல
பசிகண்டு துடிக்கிறமே
பாழும் புயல் எங்களையும்
ஏன் கொண்டு போகலையே..?
ஏன் கொண்டு போகலையே…?

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (23-Nov-18, 10:12 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 290

மேலே