தன்னம்பிக்கை உனக்கிருந்தால்

தன்னம்பிக்கை உனக்கிருந்தால்...!


உனக்குள் தானே எல்லாம் உண்டு
இல்லையென்றால் நீயொரு மண்டு
முடியுமென்று முயலும் போது
உன்னை வெல்ல இங்கு யாரு?


துன்பத்தை துணிந்து சந்திக்கும் போதுதான்
உன் திறமைகள் யாவும் வெளியில் வரும்
சிறுதடைகள் ஏதும் இல்லையென்றால்
எப்படி உன்மூளை நன்றாய் செயல்படும்?


பிறர் வலியை கண்டு உணர்ந்தவன்தான்
பல வழிகளை நன்கு அறிந்திருப்பான்
பகுத்தறிய தெரிந்தவன்தான்
இவ்வுலகில் சிறந்திருப்பான்
எதையும் எதிர் கொள்பவன்தான்
வீரனாக வலம் வருவான்
நினைத்ததிங்கு நடக்கும் மட்டும்
தூக்கத்தை மிகவும் துறந்திருப்பான்
இட்ட இலக்குகளை அடையும் வரை
துணிந்து தானே செயல்படுவான்


உனக்குள் தானே எல்லாம் உண்டு
இல்லையென்றால் நீயொரு மண்டு
முடியுமென்று முயன்று பாரு
உன்னை வெல்ல இங்கு யாரு?


என் வாழ்வின் வளர்ச்சியை
வேறு எவரால் கெடுக்க முடியும்?
என் இலக்கை தடுக்க நினைத்தால்
அவன் தலைதான் இரண்டாய் உடையும்
வீழ்வதும் எழுவதும்
எனக்கொன்றும் புதிதல்ல
இன்று நான் வீழ்ந்தாலும்
நாளைக்கு மீண்டெழுவேன்
அந்தச் சுரியனைப் போல
நானும் துணிந்தவன்தான்
தன்னம்பிக்கை உனக்கிருந்தால்
நீயும் சாதனையாளன்தான்


உன் சொல்லில் உண்மை
தினம் செய்திடு நன்மை
அது போதும் மனிதா
தலை சாயாது உரிமை
தன்மானம்தான் உன்னுடமையென்றால்
விலை போகாது கடமை


எண்ணத்தில் எளிமை
உன் நெஞ்சத்தில் வலிமை
இவ்விரண்டும் இருந்தால் போதும்
நீயும் வகிப்பாய் தலைமை!

எழுதியவர் : கிச்சாபாரதி (23-Nov-18, 10:33 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 1629

மேலே