அப்துல் கலாமுக்கு பிடித்த இளைஞர்
அப்துல் கலாமுக்கு பிடித்த இளைஞன்
துணிந்துதானே எழுந்து வாடா
சிறப்பு மிக்க இளைஞனே
உன்னை வெல்ல இங்கு யாருமில்ல
களம் இறங்கி வாடா நண்பனே!
மதியைக் கொண்டு விதியை வெல்லு
தடையைக் கடந்து காற்றாய் செல்லு
துணிச்சலோடு களத்தில் இறங்கி
அனுபவப்பாடத்தைக் கற்றுக் கொள்ளு
அனுபவம் தரும் பாடத்தையெல்லாம்
எந்த புத்தகமும் கற்றுதராது தோழா
துன்பம் வந்து துரத்தும் போதும்
துணிந்துதானே எதிர்த்து நில்லு
துணிந்து மட்டும் எழுந்து விட்டால்
எவனும் உன்னை நெறுங்க மாட்டான்
அந்த எமனும் கூட அஞ்சி சாவான்
துணிந்துதானே எழுந்து வாடா
சிறப்பு மிக்க இளைஞ்னே
உன்னை வெல்ல இங்கு யாருமில்ல
களம் இறங்கி வாடா நண்பனே!
என்னைக்கும் களைப்பு கொண்டதில்லை
சுறு சுறுப்பு மிக்க எறும்புதானே
அதனைப் போலே நீயும் இங்கு
தினம் செயல்பட வேண்டும் மனிதனே
ஒழுக்கத்தோடு ஒன்றிணைந்து
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் வாழ்வில் ஏது கசப்பு?
இனிக்காமல் போகுமா நீ நட்டக் கரும்பு?
வளர்ச்சிக்கு தேவை கடும் உழைப்பு
அதை தொடர்ந்தால் உனக்கு என்ன இழப்பு?
சோம்பலை விரட்டி தூக்கத்தை எழுப்பு
இருளை நீக்கும் ஞான தீபத்தை ஏற்று...
பகுத்து அறிந்து உண்மையை போற்று!
தன்னம்பிக்கை தனல்
கிச்சாபாரதியின் வரிகள்