அழகு

கருப்பாய் இருந்தால் கலை அழகு
கண்ணங்குழி சிரிப்பழகு
கவிதைகள் பேசும் இதழழகு
விடைக் கொடுக்காமல் திரியும் விழியழகு
முட்ட பார்க்கும் மூக்கழகு
மூவிரல் தீண்டும் முடியழகு
நடையில் உடையழகு
நடந்தால் இடையழகு
நா தீண்டும் பல்லழகு
நயங்கள் பேசும் சொல்லழகு
நான் என்னும் கர்வம் கொள்ளும்
இமையழகு
நீ தானே எந்தன்
உலகு ....

எழுதியவர் : சண்முகவேல் (23-Nov-18, 11:07 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : alagu
பார்வை : 468

மேலே