தலைவனும் தலைவியும்

தலைவன்

வாணி
பக்கம் வா - நீ
நீதான்
எந்தன் இராணி

வேணி
இராணி தேனீ
எந்நாளும்
இன்பம் தா - நீ

என்னுடன்
தினம் இயைந்து
நதியாய் கொஞ்சம் வளைந்து
இடையை நன்கு நெளித்து
என் கையை பற்றி பிடித்து
தலை நிமிர்ந்து
வெளியில் போ -நீ

தலைவி :

நான்தான் 
உந்தன் இராணி
பக்கம் இருக்கு
எந்தன் மேனி

இளம் மொட்டு
மெல்லத்தொட்டு
என் வெட்கம் 
உடைத்து போ-நீ

சொர்க்க கதவு தனை திறந்து
என்னுள் வந்து புகுந்து
வெளி உலகை நீயும் மறந்து
நல்லுறவு இன்று கொள் -நீ

நித்தமிங்கு வந்து
சத்தமின்றி யுத்தம் செய்து
பெண் வெட்கத்தைக் கொன்று
எனை வீழ்த்தி நீயும் வென்று
இன்பம் எடுத்துக் கொண்டு போ -நீ!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Nov-18, 9:51 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 869

மேலே