என் முழு மதியாள்
நிலவொளியில்
என் முழுமதியாள்
நிற்பதைக் கண்டேன்!
மனம் துள்ளிக் குதிக்க
ஓடிப்போய்
எட்டிப் பிடித்தேன்
வானவில்லாய்
கை பக்கம் வளைத்து
கட்டியணைத்தேன்
எழுந்து நின்ற
பேராசை தீர
முத்தம் பதித்தேன்
பெண் இலக்கணம் மிக்க
அவள் நாணம் குறைய
ஆடை களைந்தேன்
மாமல்லன் வடித்த
பெண் பேரழகை இரசித்து
என்னை மறந்தேன்
தன்னிலை மறந்து
அவளோடு இணைந்து
சொர்க்கம் அறிந்தேன்
வாழ்வில்
ஒவ்வொரு இரவும்
ஒவ்வொரு நொடியும்
பள்ளியறை பாடங்களை
கற்றுத்தெளிந்தேன்
என் வாழ்க்கை விடிய
விழித்து எழுந்தேன்
அவள் உறவுக்கு பின்தான்
நான் முழுமை அடைந்தேன்
அவள் இல்லையென்றால்
நான் எங்ஙனம் வாழ்வேன்?
அவளோடு வீழ்ந்து
புதைந்துதான் போவேன்!

