முதுமொழிக் காஞ்சி 71
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்.
புகழ்வெய் யோர்க்குப் புத்தேணா(டு) எளிது. 1
- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால்,, ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழும் தேவலோகம் அடைதல் எளிது.
புகழை விரும்பி அறஞ்செய்தாரைத் தேவர்கள் தாமே வந்து உபசரித்து அழைத்துப் போவர்; ஆதலால் அறஞ்செய்தார் சுவர்க்கம் புகுதல் எளிதே என்பதாம்.
பதவுரை: புகழ் - கீர்த்தியை, வெய்யோர்க்கு - விரும்பினோர்க்கு, புத்தேள்நாடு - தேவலோகம் அடைதல்,