கஜா புயல்
"கஜா" புயலே!
உனக்கு என்ன அவ்வளவு பசியோ! ...
நெற்பயிர்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டாயே...........
பசுமையின் மீது உனக்கு என்ன அவ்வளவு ஆத்திரமோ!........
மரங்கள் அனைத்தையும் தள்ளிவிட்டு சென்றுவிட்டாயே..........
"கஜாவே" உனக்கு தங்க இடமில்லை என்று எங்கள் இருப்பிடத்தை அழித்துவிட்டாயே............
இயற்கை காற்று வாங்காமல் செயற்கை காற்று வாங்கிய எங்களை...
தற்போது காற்றே இல்லாத நிலைக்கு மாற்றிவிட்டாயே!
வண்ண வண்ண எல். ஈ. டி விளக்குகள் எரிந்த இடத்தில் தற்போது மின்மினிப்போல் தோற்றமளிக்கும் மெழுகுவர்த்தி ஏற்றும் நிலைக்கு ஆக்கிவிட்டாயே.......
ஏன் இந்த கோரத்தாண்டவம்.........
யாரோ செய்த தவறுக்கு எங்களை இப்படி பழிவாங்கிவிட்டாயே...........
By:
Alsima Afrin