தானியங்களின் நன்மைகள்

அடேங்கப்பா!இவ்வளவு நன்மைகள் இருந்தும் ஏன் நாம் இந்த உணவுகளை கண்டு கொள்வதில்லை?

தானியங்கள்

சிறுதானியங்கள் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்தவையாக உள்ளன. இதில் வைட்டமின் ஈ மற்றும் பி உள்ளன. இவற்றில் 15 சதவீதம் புரதச்சத்தும் மற்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

தானியங்களின் வகைகள்

கம்பு
சோளம்
வரகு
சாமை
கேழ்வரகு
குதிரைவாலி
திணை
பணிவரகு
இவற்றில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, காப்பர், மாவுச்சத்து, கால்சியம் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. மேலும், கம்பு மற்றும் சோளத்தில் கொழுப்புச்சத்து உள்ளன.

தானியங்களின் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உடலில் தேவையில்லாத நீரை அகற்றி சிறுநீரக தொல்லையிலிருந்து காப்பாற்றும்.
மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.
இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வதனால் தேவை இல்லாத உடல் எடை மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் காப்பாற்றும்.
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இவை இரத்தத்தில் உள்ள அணுக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு உதவுகிறது. மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
எலும்புகளின் சக்தியை அதிகரிப்பதற்கும், வலுவடையச் செய்வதற்கும் உதவுகிறது.
கொழுப்பு அடைப்பு நோயிலிருந்தும், கொழுப்பு கட்டிகளிலிருந்தும் விடுபடலாம்.
அடிக்கடி சிறுதானியங்களை சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான புற்றுநோயிலிருந்தும் 50 சதவீதம் விடுபடலாம்.
தசைகளின் வலிமையை அதிகரிக்கும்.
மன அழுத்தத்தினால் ஏற்படும் தூக்கமின்மையிலிருந்து விடுபடலாம்.
மேலும், ஆஸ்த்துமா மற்றும் தலைவலி தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தாய்பால் சுரப்பதினை அதிகரிக்க செய்கிறது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வு மற்றும் முதுகுவலிக்கு ஏற்ற உணவாகும்.
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை அகற்றி நல்ல கொழுப்புகளை இரத்தத்தில் அதிகரிக்க செய்கிறது. மேலும்,இவற்றிற்கு லிப்போ புரதக் கொழுப்பு என்றும் கூறலாம்.
வாதம் மற்றும் எலும்பு முறிவுக்கு ஏற்ற உணவாகும்.
அனைத்து இருதய நோயிலிருந்தும் நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.
சரும பிரச்சனைகளில் தானியங்கள்?

இரத்த ஓட்டத்தினை அதிகரித்து சருமத்தை அழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், சருமத்தை பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.
இளமையான தோற்றத்தினைக் கொடுக்கும்.
சரும புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
தோலினை மெருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
முகப்பரு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
முடி உதிர்வு, இளநரை மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளிருந்தும் விடுபடலாம்.
மேலும், முடியின் வளர்ச்சியை அதிகரித்து வலிமையாக்குகிறது.
தானியங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தோழமைகளே பகிருங்கள்.நம் உணவே மருந்தாகும்.

எழுதியவர் : (25-Nov-18, 7:53 pm)
பார்வை : 847

சிறந்த கட்டுரைகள்

மேலே