முதுமொழிக் காஞ்சி

மூத்தோர் வாக்கு அல்லது மூத்தோர் உரை என்பதை குறிப்பது முதுமொழி.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலன். பல மணிகளால் கோர்க்கப்பட்ட அணி போல மூத்தோர் உரைகளை கோர்த்து தருவதே முதுமொழிக் காஞ்சி என்னும் நூல்.

இதன் ஆசிரியர் மதுரை கூடலூர் கிழார்.

இது பதினெண்கணக்கு நூல்களில் ஒன்று. தொல்காப்பியரும் புறநானூற்று பாடல்களும் இந்நூலை குறிப்பிட்டு பல இடங்களில் தெரிவிப்பதால் மிகவும் தொன்மையான நூல் என்பது புரிகிறது.

பத்து தலைப்புகளில் பத்து பத்தாக நூறு செய்யுள் அடங்கிய அறிவுரை கோவை இது. இந்நூலின் பா அமைப்பு குறள் வெண்செந்துறை. ஒவ்வொரு செய்யுளும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்றே துவங்கும். ஆனால் எளிமை கருதி மையக்கருத்து மட்டும் எடுத்து காட்டப்பட்டிருக்கிறது.

பத்து தலைப்புகள் 1) சிறந்த பத்து 2) அறிவுப் பத்து 3) பழியாப் பத்து 4) துவ்வாப் பத்து 5) அல்ல பத்து 6) இல்லைப் பத்து 7) பொய்ப் பத்து 8) எளிய பத்து 9) நல்கூர்ந்த பத்து 10) தண்டாப் பத்து

எழுதியவர் : (26-Nov-18, 4:21 am)
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே