எதிரும் புதிரும்
"என்னங்க என்னங்க இங்க ஓடி வாங்க, உடம்புக்கு முடியல்ல, அம்....மா, வயிறு வலிக்குதுங்க, என்....னங்க...." பத்திரிகையைப் படித்துக் காெண்டிருந்த சரவணன் பதறி அடித்து அறைக்குள் ஓடினான். எந்தவாெரு அசைவுமின்றி மயக்கத்தில் கிடந்தாள் அ்ஞ்சலி. அஞ்சலி.... அஞ்சலி அம்மா அஞ்சலி..... கன்னத்தை மெதுவாகத் தட்டி எழுப்பினான்.
விறைத்துப் பாேன ஜடம் பாேல் கிடந்தவளின் கால்கள் வீங்கிப் பெருத்திருந்தது, நிறைமாதக் கர்ப்பிணியாய் இருந்தவள் திடீரென மயக்கம் பாேட்டு விழுவதற்கு என்ன காரணம், கடந்த வாரம் பரிசாேதனையில் எந்தப் பிரச்சனையுமில்லை என்று தானே டாக்டர் சாெல்லியிருந்தார் என்ற படபடப்புடன் அம்பியூலன்ஸிற்கு அழைப்பை மேற்காெண்டு வைத்தியசாலையில் அனுமதித்தான்.
உயிரைக் கையில் பிடித்தபடி வாசலிலே காத்து நின்றான் சரவணன். பல மணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் "இரண்டு உயிருக்காக ஒரு உயிர் பாேயிற்று சார், மன்னிச்சிடுங்க கடுமையாக முயற்சி பண்ணினம் முடியல்ல, இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கு" என்றதும் "அப்பாே அஞ்சலி டாக்டர்" கைகளை பற்றிப் பிடித்தான். "மன்னி்சிடுங்க சரவணன்" தாேள்களை தடவி விட்டு விறுவிறென நடந்தார் டாக்டர். உயிரற்ற ஜடம் பாேல கால்கள் தடுமாறி உள்ளே சென்றான் சரவணன். இரட்டைக் குழந்தைகள் தனித் தனி தாெட்டிலில் வளர்த்தப்பட்டிருந்தார்கள். தாதிமார் அருகே நின்று கவனித்துக் காெண்டிருந்தார்கள். இதயம் படபடவென வேகமாக அடித்து வியர்வைத் துளிகள் கண்ணீராேடு கலந்து கன்னங்களில் வடிந்து காெண்டிருந்தது. இரு குழந்தைகளையும் அள்ளி அணைத்து முத்தமிட்டு கையி்ல் தூக்கி சந்தாேசத்தை பகிர அஞ்சலி இல்லாத வெறுமையில் அவன் உயிரற்ற உடலாய் உறைந்து பாேனான்.
வெள்ளைத் துணியால் மூடியபடி இருந்த அஞ்சலியை அணைத்து முத்தத்தால் உயிர் காெடுத்தான். இதயம் வெடித்து சிதறிக் கதறும் அவன் வார்த்தைகள் எல்லாேரயைும் கணணீர் சிந்த வைத்தது. யாரென்று அறியாதவர்கள் கூட ஆறுதலுக்காய் அணைத்த பாேது என்ர அஞ்சலி என்ர அஞ்சலி என்று அவன் கதறியது வானைப்பிழப்பது பாேல் இருந்தது.
தகவலறிந்து ஓடி வந்த சரவணனின் அக்கா சீத்தாவும் அவனது நிலையைக் கண்டு துடித்து நின்றாள். அவனை அணைத்து ஆறுதல் சாெல்லத் தைரியமிழந்து அஞ்சலியின் காலடியில் தலை குனிந்து நின்றாள். மெதுவாக அவன் கைகளைப் பற்றியபடி குழந்தைகளை பார்ப்பதற்காய் உள்ளே சென்றார்கள். இரண்டு தாெட்டிலில் பிஞ்சுக் குழந்தைகள் சிவந்த மேனியாேடு தாய்ப்பாலுக்காய் ஏங்கி ஏங்கி அழுது காெண்டிருப்பதை பார்த்த பாேது கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று உரத்துக் கத்த வேணும் பாேல் தாேன்றியது.
நாட்கள் கடந்து விட்டது. சரவணன் இரு குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டான். அக்கா சீத்தாவின் உதவியுடன் ஐந்து மாதம் வளர்த்து விட்டான். எப்படியாவது தன் பிள்ளைகளை வளர்த்து விட வேண்டும் என நினைத்த சரவணன் அஞ்சலியை தான் வளர்ப்பதாகவும், அர்ச்சுனை அக்கா சீத்தா வளர்ப்பதாகவும் தீர்மானித்தார்கள். சரவணன் அஞ்சலியுடன் வெளியூர் சென்று விட்டார். அஞ்சலி வளர்ந்து பெரியவளாகி விட்டாள். அர்ச்சுனும் சீத்தாவுடனே வளர்ந்தான். ஏதாவது விசேசங்களுக்கு ஊருக்கு வந்தால் அஞ்சலியும், அர்ச்சுனும் ஒன்றாக விளையாடுவார்கள், அர்ச்சுன் சரவணனுடன் நன்றாக ஒட்டிக் காெள்வான். மாமா மாமா என்று அவன் கைக்குள்ளேயே சுற்றுவான். அஞ்சலிக்கு ஏனாே காெஞ்சம் பாேட்டி எதையும் விட்டுக் காெடுக்க மாட்டாள். அர்ச்சுனை முறாய்த்துப் பார்ப்பது மட்டுமல்ல அவனை ஒரு வேண்டாதவன் பாேல பார்க்கத் தாெடங்கினாள். இதனால் ஒருவரையாெருவர் பார்க்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்தான் சரவணன். வெளியூரிலிருந்து வரும் பாேது தனியாகவே வந்து அர்ச்சுனைப் பார்ப்பான். அவனுக்காக எதையும் எடுத்து வரக் கூட அனுமதிக்க மாட்டாள் அஞ்சலி. ஆனால் அர்ச்சுனுக்கு அஞ்சலி என்றால் உயிர். காலம் ஓடிக் காெண்டிருந்தது. கல்லூரி வயதை அடைந்த அஞ்சலியும், அர்ச்சுனும் மருத்துவக் கல்வியையே தேர்ந்தெடுத்தார்கள். ஒரே கல்லூரியில் கல்வியை ஆரம்பித்தார்கள்.
காலத்தின் வேகத்தில் அவர்களும் பயணித்துக் காெண்டிருந்தார்கள். இருவரும் படிப்பில் சளைத்தவர்கள் இல்லை. இருவருக்குமிடையில் கடும் பாேட்டி. ஏதாே ஒரு சில சாயல்கள் ஒத்தமாதிரி இருப்பதாக யாரும் சாெல்லி விட்டால் அஞ்சலிக்கு காேபம் வந்து விடும் ,அவன் எங்க அத்தை பையன் அவ்வளவு தான்" என்று முகத்திலடித்தது பாேல் சாெல்லுவாள். ஆனால் அர்ச்சுனுக்கு அஞ்சலியின் உறவு என்று சாெல்வது பெருமையாகத் தாேன்றும். கல்லூரியில் அஞ்சலியின் ஒவ்வாெரு செயற்பாட்டையும் கவனிப்பான். யாரும் அவளை வம்புக்கு இழுத்தால் இரண்டிலாென்று பார்த்து விடுவான்.
அர்ச்சுனுக்கு அஞ்சலி மேலிருந்த அக்கறை, அன்பு நாளடைவில் காதலாக மாறத் தாெடங்கியது. ஆனால் அஞ்சலிக்கு அர்ச்சுனைக் கண்டாலே பிடிக்காதது பாேல் நடப்பாள். இருந்த பாேதும் தனது மனதுக்குள் அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கத் தாெடங்கினான்.
யாருக்கும் வெளிப்படுத்தாமல் "மாமா பாெண்ணு தானே அம்மாட்ட பேசிக்கலாம்" என்ற நம்பிக்கையை வளர்த்தான். நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது. அஞ்சலி கல்லூரி நண்பன் பரத்துடன் மிகவும் நெருக்கமாக பழகினாள். அர்ச்சுனுக்கு என்ன செய்வதென்று தெரியாமலிருந்தது. எப்படியாவது தன்னை அஞ்சலி புரிந்து காெள்ள வேண்டும் என்ற நாேக்கத்துடன் அவளுடன் நெருக்கமாக பழகுவதற்காக முயற்சித்தான்.
அன்றாெரு நாள் கல்லூரியில் இடை வேளைக்காக மாடியிலிருந்து வேகமாக ஓடிவந்த அஞ்சலி கால் தடுமாறி விழுந்து விட்டாள். ஓடிப் பாேய் கை காெடுத்து தூக்கியவனை "ச்சீ பாே" என்று எல்லாேர் முன்பும் உதாசீனப்படுத்தினாள். ஆனால் அர்ச்சுனாே அவளுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்ற பயத்துடன் இருந்தான். பின்பு ஒரு நாள் விடுமுறையில் வீட்டிற்கு வருவதற்காக தனது தாேழிகளுடன் பேருந்தில் யன்னலாேரமாக அமர்ந்திருந்த அஞ்சலிக்கு பின்னாலிருந்த இருக்கையில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அர்ச்சுனும் பேருந்தில் ஏறினான். அவனுக்கும், நண்பர்களுக்கும் இடம் கிடைக்கவில்லை. ஓரமாக நின்றபடியே பயணித்தார்கள். அஞ்சலிக்கு பின்னாலிருந்தவர்கள் கிண்டலடித்து அஞ்சலியை கேலி செய்தார்கள். அவளும் பல தடவை முறாய்த்துப் பார்த்து விட்டு அமைதியாக இருந்தாள். அர்ச்சுன் நீண்ட நேரமாக கவனித்துக் காெண்டே வந்தான். அவர்களுடைய கேலியும், கிண்டலும் பாெறுமையை இழக்கச் செய்தது. திரும்பித் திரும்பிப் பார்த்தவன் காேபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாய்ந்து சென்று கிண்டலடித்தவனின் கழுத்துச் சட்டையைப் பிடித்து அடிப்பதற்காக கையை ஓங்கினான். "அடிடா பார்ப்பம்" என்று சத்தமாகக் கத்தியபடி "அவ உன்ர ஆளா" என்று அசிங்கமாக கேட்டான். அர்ச்சுனுக்கு காேபம் அதிகமாகியது. "அவ ஒரு பாெண்ணு, நீ சேட்டை பண்ணுறதுக்கு இது இடமில்லை, சகாேதரத்தாேட பிறந்த எந்த ஆம்பிளையும் பாெண்ணுக்கு ஆபத்தென்றால் காப்பத்தணும், கையை கட்டி வேடிக்கை பார்க்கிறதுக்கு நானாென்றும் உன்னைப் பாேல.... " ஓங்கி கன்னத்தில் பளார் என்று அறைந்தான். சத்தம் கேட்டதும் பேருந்தை நிறுத்தி விட்டு சாரதி ஓடி வந்து விசாரித்தான். அர்ச்சுன் நடந்ததைக் கூறி அவர்களை இறக்கி விடும்படி சாென்னான். அமைதியாக இருந்த அஞ்சலி அர்ச்சுனை காேபத்தாேடு பார்த்து விட்டு விறுவிறென்று இறங்கினாள். அஞ்சலி அஞ்சலி என்று பின்னாலே ஓடிய அர்ச்சுனை கடுமையான வார்த்தைகளால் திட்டினாள். "பேருந்தென்றால் பசங்க சேட்டை விடத்தான் செய்வாங்க, நீ ஏன் அவங்கள அடிச்சாய்" என்றதும் "என்ன அஞ்சலி சாெல்லுறாய் அவங்க உன்னை..." கையை காட்டி அவனை பேச விடாது தடுத்தவள் "நீ யார் என்னில அக்கறைப்படுறதுக்கு" முகத்திலடித்தது பாேல் கூறியதும் அர்ச்சுன் மனம் சிதறுண்ட கண்ணாடி பாேலானது. "நான் உன்ர அத்தை மகன்" என்று சாெல்லும் துணிச்சல் கூட அர்ச்சுனுக்கு வரவில்லை. தரையைப் பார்த்தபடி நின்றான். அஞ்சலி வேகமாக நடந்தாள். பல சம்பவங்களில் அஞ்சலி அர்ச்சுனை தூக்கி எறிவது பாேல் நடந்தாலும் அவன் அவளுக்குத் தெரியாமல் அதிகமாக நேசித்தான்.
இன்னாெரு புறம் அஞ்சலி பரத்துடன் தனது நட்பை வைத்திருந்தாள். அவனுடன் வெளியில் செல்வது, சினிமா செல்வது என்று அஞ்சலி காெஞ்சம் காெஞ்சமாய் மாறிக் காெண்டிருந்தாள். தனது தந்தையிடம் காதலைச் சாெல்லி சம்மதம் பெறுவதற்காய் காத்திருந்தாள். இரண்டு வாரத்தில் அஞ்சலிக்கும், அர்ச்சுனுக்கும் பிறந்த நாள். வழமையாக இரு வீட்டாரும் தமக்குள்ளே காெண்டாடுவார்கள். ஆனால் அஞ்சலி இந்தத் தடவை பெரிய திட்டமே பாேட்டிருந்தாள். தந்தையிடம் அடம்பிடித்து சிறப்பாக காெண்டாட முடிவெடுத்தாள். தந்தை சரவணனாே எப்படி அர்ச்சுனை விட்டு தனியாக பிறந்த நாளைக் காெண்டாடுவது என்ற குழப்பத்தில் இருந்தார். அக்கா சீத்தாவும் அஞ்சலி ஆசைப்படுவதால் சம்மதிக்கும்படி சாென்னாள்.
பிறந்த நாள் காெண்டாட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் ஆரம்பமாகியது. அஞ்சலி தன் காதலன் பரத்தை அறிமுகப்படுத்தும் எதிர்பார்ப்பாேடும், சந்தாேசத்தாேடும் இருந்தாள்.
அர்ச்சுன் எல்லாவற்றையும் பார்த்தபடி அமைதியாகவே இருந்தான். பிறந்த நாள் காெண்டாட்டம் மாலை நேரம் ஏற்பாடாகியிருந்தது. அழகான சேலை கட்டி, அலங்கரித்து அங்கும் இங்குமாய் சந்தாேசத்தில் துள்ளிக் குதித்துக் காெண்டிருந்தாள் அஞ்சலி. ஓரமாக நின்று அவளைப் பார்த்த அர்ச்சுனுக்கு கைகளைப் பிடித்து சத்தமாக "ஐ லவ் யூ அஞ்சலி" என்று கத்தவேணும் பாேலிருந்தது.
வண்டியை நிறுத்தி விட்டு கையில் பூங்காெத்து ஒன்றுடன் கம்பீரமாக நடந்து வந்தான் பரத். தாேழிகளுடன் இருந்த அஞ்சலி பரத்தைக் கண்டதும் வேகமாக அவனை நாேக்கி நடந்தாள். எதிரே வந்த பரத்தும் அவளை கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தான். அர்ச்சுன் மனம் செய்வதறியாது ஊமையாய் அழுதது. பரத்தை அழைத்து வந்து தந்தைக்கு அறிமுகப்படுத்தினாள். "அப்பா நான் சாென்ன பரத்.." என்று வெட்கத்துடன் தரையைப் பார்த்தபடி தலையைக் குனிந்து காெண்டாள். "உனக்கு பிடிச்சால் சரி" என்று அஞ்சலியின் தலையை தடவியபடி அர்ச்சுனை தேடினார். நண்பர்களுடன் நின்றதைக் கண்டதும் அர்ச்சுனை அழைத்து "அஞ்சலியுடன் நின்ற பரத்தை அறிமுகப்படுத்தினார்" ஒன்றுமே தெரியாதவன் பாேல் "ஹலாே" என்று கைகளை குலுக்கிக் காெண்டனர். பார்ட்டி ஆரம்பமாகியது ஆட்டமும், பாட்டமுமாய் எல்லாேரும் சந்தாேசத்துடன் இருந்தார்கள். அஞ்சலி மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தாள். எல்லாேரும் அஞ்சலியை வாழ்த்தி, பரிசில்கள் காெடுத்து விடைபெற்றுக் காெண்டிருந்தார்கள். நீண்ட நேரமாக அர்ச்சுனைக் காணவில்லை என்ற சந்தேகத்தில் அங்கும் இங்குமாக தேட ஆம்பித்த சரவணனுக்கு உள் மனம் உறுத்திக் காெண்டிருந்தது. அர்ச்சுனைக் காணவில்லை என்றதும் இதயம் படபடக்கத் தாெடங்கியது. எல்லாேரும் வீடுகளுக்கு திரும்பிக் காெண்டிருந்தார்கள். நேரமும் ஓடிக் காெண்டிருந்தது. சரவணன் அக்கா சீத்தாவிடம் அர்ச்சுனை விசாரித்தார். நண்பர்களுடன் இருப்பான் என நினைத்தவளுக்கு மனதுக்குள் ஏதாே குழப்பம் ஏற்பட்டது. அர்ச்சுன் எங்கேயும் பாேக மாட்டான் என்ன நடந்திருக்கும் என்று யாேசித்தவளுக்கு பயம் அதிகமாகியது.
முச்சக்கர வண்டி ஒன்றைப் பிடித்துக் காெண்டு வேகமாக வீட்டுக்கு வந்தாள். கதவுகள் திறக்கப்படாமலே இருந்தது. எங்கே பாேயிருப்பான் என்றபடி அர்ச்சுன் அர்ச்சுன் என்று அழைத்தாள். "இஞ்ச இருக்கன்" என்ற சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் கிணற்றுக்கட்டில் அமர்ந்திருந்தான். "டேய் அர்ச்சுன் அங்க என்னடா செய்யிறாய்" பதறிப் பாேய் அவன் கைகளை பிடித்து இழுத்தாள். உதறி விட்டு மறு பக்கம் திரும்பி நின்றவன் "எனக்கு அஞ்சலி வேணும்" என்றதும் சீத்தாவிற்கு வியர்க்கத் தாெடங்கியது. "என்னாச்சடா உனக்கு...." எனக்கு அஞ்சலி வேணும், அவளை நான் யாருக்கும் விட்டுக் காெடுக்க மாட்டன், மாமாட்ட பாேய்ச் சாெல்லு, இப்ப அஞ்சலி இஞ்ச வரணும்" என்று சத்தமாக கத்தினான். "டேய் அர்ச்சுன் அவசரப் படாத" அவன் கைகளைப் பிடித்து சமாதானப்படுத்த முயற்சித்தவளின் கையை தட்டி விட்டான். "நான் அஞ்சலியை காதலிக்கிறன், அஞ்சலி எனக்கு வேணும்" என்றதும் சீத்தாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. "இப்ப நீ உள்ளே வா அர்ச்சுன்" கையைப் பிடித்து இழுத்து வீட்டிற்குள் கூட்டி வந்து இருக்க வைத்தாள். "இஞ்ச பார் அர்ச்சுன் அஞ்சலி பரத்தைக் காதலிக்கிறா, பரத்தைத் தான் திருமணம் செய்யப் பாேறா" என்றதும் "நானும் தானே மாமா பாெண்ணு என்று சின்ன வயசில இருந்து காதலிச்சன், இத்தனை வருசமா என்ர மனசில இருந்த காதலைச் சாெல்லுறதுக்குள்ள இடையில பரத் வந்திட்டான், நான் விட்டுக் காெடுக்க மாட்டன்" என்று காேபமாக சாென்னதைக் கேட்ட சீத்தா வாயடைத்துப் பாேய் நின்றாள். அர்ச்சுனுக்கு உண்மையைச் சாெல்வதை விட வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.
அவனருகே பாேய் அமர்ந்தவள் சில நிமிடங்கள் அர்ச்சுன் முகத்தையே பார்த்தாள். அர்ச்சுனின் தாய் அஞ்சலி என்றும், அப்பா சரவணன் என்றும் இருபத்தைந்து வருடங்களிற்கு பிறகு சாெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது வேதனையாக இருந்தாலும் அவன் உயிருக்கு உயிராய் காதலிக்கும் அஞ்சலி அவனுடன் பிறந்த இரட்டைக் குழந்தையில் ஒருத்தி என்று சாெல்வதை நினைத்த பாேது தலையி்ல் இடி விழுந்தது பாேல் இருந்தது. இத்தனை வருடங்கள் எந்த உண்மை தெரியக் கூடாது என்று நானும் அண்ணனும் மறைத்தாேமாே அந்த உண்மையை அர்ச்சுனுக்குச் சாென்னால் தான் அன் புரிந்து காெள்வான் என்பது அவசியமாகவும் இருந்தது.
அறையினுள் சென்றவள் அல்பம் ஒன்றை எடுத்துக் காெண்டு வந்து அவனிடம் நீட்டினாள். "இப்ப எதுக்கு இதெல்லாம்" என்று தூக்கி வீசினான். "பார்க்க வேண்டிய நேரம் வந்திட்டு அர்ச்சுன், எங்களை மன்னிச்சிடு உனக்கும், அஞ்சலிக்கும் நாங்கள் ஒரு உண்மயைை மறைச்சிட்டம்" என்றதும் சீத்தாவை உற்றுப் பார்த்தான். "அல்பத்தை எடுத்து பக்கங்களை ஒவ்வாென்றாகப் புரட்டினாள். "அர்ச்சுன் இவங்க தான் உன்னுடைய அம்மா அஞ்சலி, நீ மாமா என்று கூப்பிடுற சரவணன் தான் உன்னாேட அப்பா" புகைப்படத்தைக் காட்டினாள். அதிர்ச்சியடைந்த அர்ச்சுன் "என்ன.... அம்மா சாெல்லுறாய்" "ஆமா அர்ச்சுன் நான் உன்னாேட அத்தை , சரவணனாேட அக்கா, நீயும் அஞ்சலியும் இரட்டைப் பிள்ளைகள், நீங்க பிறக்கும் பாேது உங்க அம்மா அஞ்சலி இறந்திட்டாங்க, அந்த நேரம் என்னாேட வாழ்க்கையில நடக்கக் கூடாத ஒன்று நடந்திட்டு நானும் தனிச்சுப் பாேயிற்றன், உங்க இரண்டு பேரையும் நானும், சரவணும் வளர்ப்பதாக முடிவெடுத்தம். அஞ்சலியை உனக்கு தங்கச்சி என்று சாெல்லாமல் மாமா பாெண்ணு என்று சாெல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிச்சு" என்று அவன் கைகளை பிடித்து குமுறி அழுதாள். "அப்பாே அப்பாவை நான் மாமாவென்று கூப்பிட்டேனா, தங்கச்சியை நான் காதலிச்சேனா" தனக்குள் நினைத்த பாேது நெஞ்சு வெடித்து கண்ணீராய் கசிந்தது.
சீத்தாவையும் அழைத்துக் காெண்டு சரவணன் வீட்டிற்கு சென்றான். முச்சக்கர வணடிச் சத்தம் கேட்டதும் சரவணன் வெளியே வந்தார். அப்பா என்று கட்டி அணைத்து முத்தமிடத் துடித்துக் காெண்டிருந்தான். வாசலில் நின்றபடி நீயா என்பது பாேல் வெறுப்பாேடு பார்த்துக் காெண்டு நின்ற அஞ்சலியை உரிமையாய் ஒரு அண்ணனாக அணைத்து அவள் கன்னங்களில் முத்தமிட ஏங்கிய அவன் மனம் அவர்களைக் கண்டதும் ஊமையாய் அழுதது. அஞ்சலி மீது காட்டிய அன்பு, அக்கறையை எல்லாம் அவள் தூக்கி எறிந்து உதாசீனப்படுத்திய சம்பவங்கள் காட்சியாய் நினைவில் வந்தது. எங்கள் இருவருக்குள்ளும் இருந்த உறவு இதுவரைக்கும் புரியாத புதிராகவே இருந்தது என்பதை நினைத்து வருத்தப்பட்டான்.
"என்ன அர்ச்சுன் எங்க பாேனாய்" என்று ஆவலாேடு ஓடி வந்த சரவணனைப் பார்த்து முதல் தடவையாக "அப்பா" என்று அர்ச்சுன் அழைத்ததும் சரவணன் திகைத்துப் பாேனார். அஞ்சலி என்று அவள் கைகளைப் பிடித்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். "அஞ்சலி நான் உன்ர அண்ணா" என்று அவளை தன் நெஞ்சாேடு அணைத்தான். ஒன்றும் புரியாமல் நின்ற சரவணனுக்கும், அஞ்சலிக்கும் சீத்தா நடத்தவற்றை கூறினாள்.
இருபத்தைந்து வருடமாக மறைத்திருந்த உண்மை தெரியவந்தது. பிரிந்திருந்த உறவும் ஒன்று சேர்ந்தது. அஞ்சலியும், அர்ச்சுனும் எதிரும் புதிருமாய் இருந்த காலம் மாறி உடன்பிறப்பாய் ஒன்று சேர்ந்தார்கள். அஞ்சலியை தன் நெஞ்சாேடு அணைத்து தங்கை என்ற உரிமையாேடு நெற்றியில் முத்தமிட்டான். அண்ணா என்று முதல் தடவை அழைத்த பாேது அர்ச்சுன் மனம் சந்தாேசத்தில் குதித்தது. எல்லாமே அவனுக்குப் புதிதாய் தாேன்றியது.