எம் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் - உரையாடல் குறுங்கதை

கண்ணு நல்லாருக்கிறயா?
@@@@
யாரு பாட்டி நீங்க?
@@@
நாந்தான்டா சாமி உங் கோயமுத்தூர் சின்னப்பாட்டி. நான் உங்க ஊட்டுக்கு வந்து ரண்டு வருசம். உனக்கு என்ன நாபகம் இருக்காது.
@@@@
என்னை என்ன சொல்லிக் கூப்பிட்டீங்க? ஏஞ் சாமின்னு சொன்னீங்க?
@@@@
கண்ணு நல்லாருக்கிறயானு கேட்டேன். நம்ம கோயமுத்தூருல கொழந்தைங்கள கண்ணு, சாமின்னு கூப்படறது வழக்கம் சாமி.
@@@
எம் பேரு இந்திப் பேரு. அந்தப் பேருக்கு அர்த்தம் 'கண்'. நீங்க 'கண்ணு'ன்னு என்னக் கூப்பிடதும் எனக்கு ஒண்ணுமே புரிலீங்க சின்னப்பாட்டி.
@@@@
உம் பேரு என்னடா கண்ணு?
@@@@
நாந் தான் சொன்னே எம் பேரு 'கண்'ன்னு.
@@@@
அது இல்ல கண்ணு. எதோ வேற மொழிப் பேரு தான் உம் பேருன்னு சொன்னயே கண்ணு.
@@@@
என்னோட இந்திப் பேரு 'நேத்ரா'.
@@@@
எதுக்குடா சாமி உனக்கு அந்தப் பேர வச்சாங்க.
@@@@@
எங் கண்ணு என்னோட அம்மா கண்ணு மாதிரி அழகான கண்ணாம். 'கண்'ன்னு தமிழ்ப் பேர வச்சா எல்லாம் சிரிப்பாங்கன்னு அதே அர்த்தம் உள்ள 'நேத்ரா'ங்கற இந்திப் பேர எனக்கு வச்சுட்டாங்க. எல்லாரும் எம் பேர "ஸ்வீட் நேம்"ன்னு சொல்லறாங்க சின்னப்பாட்டிம்மா.
@@@@@
சுவீட்டு நேமுன்னா என்னடா சாமி.
@@@@@
எம் பேரச் சொன்னாவே இனிப்பா இருக்குமாம்
@@@
என்ன சுவீட்டோ. 'கண்'ன்னு பேரு வைக்க வெக்கமா இருந்தா 'கண்மணி'ன்னு உனக்கு பேரு வச்சிருக்கலாமே.
@@@@
என் வகுப்பில எல்லாப் பேரும் இந்திப் பேருதான் சின்னப்பாட்டிம்மா.
@@@@
என்ன எழவோ. ஆருமே நம்ம தாய் மொழிய மதிக்கிறதில்ல. காலங் கெட்டுப் போச்சுடா கண்ணு.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இந்திப் பெயர் மோகம் தமிழர்களின் தீராத தாகம்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Netra = Eye

எழுதியவர் : மலர் (25-Nov-18, 6:01 pm)
பார்வை : 162

மேலே