வலுவான உடலுக்கு வரகு

வலுவான உடலமைப்பிற்கு வரகு
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
வரகில் அடங்கியுள்ள அதிக அளவு லெசித்தின்.நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.மேலும் இதில் பி-வைட்டமின்கள் குறிப்பிடும்படியாக நியாசின் மற்றும் ஃபோலிக் ஆசிட், தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.வரகு உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவாகும்.சீரான எடைக்குறைப்பிற்கும், உடல் பருமனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கும் நல்லதொரு தீர்வாக வரகு பயன்படுகிறது.
வரகு மாங்காய் சாதம்
***************************
சுத்தம் செய்யப்பட்ட வரகை வேகவைத்து சாதம் போல் வடித்து
தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.
பின் வேர்க்கடலை துருவிய மாங்காய் ,மஞ்சள் தூள், உப்பு சேர்த்துவதக்கவும்.
வேகவைத்த வரகு சாதம் சேர்த்து பின் கொத்தமல்லி போட்டு நன்கு கலந்து பரிமாறவும்.
வரகு தோசை
********************
வரகு, உளுந்து, வெந்தயம், துவரம் பருப்பு ஆகியவற்றை நன்கு ஊறவைத்து இரவே நன்கு அரைத்து
வைத்துக்கொள்ளவும்
சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தண்ணீர் விட்டு புளிக்க வைக்கவும்.
பின் தோசை வார்த்து எடுத்தால் மொறுமொறு வென்று சுவையான
தோசை கிடைக்கும்.
கார மிளகாய் சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.
மாவை கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளித்தும் சாப்பிடலாம் 🌹