அமுது தமிழ் அழகு அவள்
அறிவை வளர்ப்பது தமிழ்
அன்பை வளர்ப்பது அவள்
அச்சம் போக்குவது தமிழ்
ஆசையை ஊட்டுவது அவள்
நேர்மை தந்தது தமிழ்
நேசம் வளர்த்தது அவள்
உயிரில் கலந்தது தமிழ்
உறவில் கலந்தது அவள்
இயக்கம் தருவது தமிழ்
இன்பம் தருவது அவள்
அமுதாய் சுவைப்பது தமிழ்
அழகாய் காண்பது அவள்