கண்டுணர்ந்த காவியங்கள்
வேண்டுமென தீண்டும் மழைத்துளிகள்
வேள்விகளை வளர்க்கும் அவள்விழிகள்
காதுமடல் சிலிர்க்கும் குளிர்அலைகள்
கன்னங்களைச் சிவக்கும் இதழ்ஒலிகள்
மோதியுடல் பிணைக்கும் சிறுவிரல்கள்
முத்தங்களால் சிவக்கும் மதுஇதழ்கள்
பாதிஇமை சுருங்க இவள்விழியும்
பக்குவமாய் முனுங்க உயிர்உறையும்
ஆதிமுதல் அந்தம்வரை குளிருறையும்
அன்பினாலே ஈருடலும் உடன்பிணையும்
காரிருட்டில் கவிவரைய யார்வருவார்
கடுங்குளிரில் உடல்நனைய போரிடுவார்
காதலியே உன்னையன்றி யார்தருவார்
கவிவரிகள் காவியமாய் மாற்றிடுவார்
கனவிலுன்னை கவிதைசெய்ய யான்வரவா
கண்டுணர்ந்து காவியங்கள் தான்தரவா