பிளாட்பார வாசிகள்

பிளாட்பார வாசிகள்

பூட்டில்லா வீடு
பயமில்லா உறக்கம்
பசிக்குமட்டும் உணவு
பதுக்க இல்லை பணம்
வியர்வையில் தினம் ஒரு குளியல்
சுவரில்லா படுக்கையறை
கடை வீதியில் திருமண நிகழ்வு
அர்ச்சனை போட ஆறுபேர்
இல்லை பால் பழம் படுக்கை
உறவுகள் இன்னும் தொடர்கிறது- இதை
நம்ப மறுக்கும் நம் மனம்
நம்பிக்கையோடு இந்த குலம்
நாளின் ஒரு நொடியேனும்
நாம் நிர்வாணமாய் இருப்பது உண்மையென்றால்
இதுவும் உண்மையே

எழுதியவர் : இளவல் (28-Nov-18, 3:41 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 59

மேலே