இரு சக்கர பயணம்

நாய் குறுக்கே ஓடியது
மரம் எதிரே வந்துவிட்டது
குடிபோதையில் லாரி ஓட்டினான்
ஒரு வழி சாலையில் எதிர்வந்தது மகிழுந்து,
ஆட்டோக்காரன் மோதி சென்றான்
சிவப்பு விளக்கு மறந்து போனேன்
தலை கவசம் தவறவிட்டேன் ....
குடிபோதையிலும் தெளிவாய் ஓட்டினேன்
நண்பனுக்கு அவசரம் ஆதலால்
இருசக்கரத்தித்தில் மூவர் பயணம் ,
அலுவலக அவசரம் ...
கொஞ்சம் முறுக்கினேன் வேகமாய் ..
அடிக்கிச்சொல்ல ஆயிரம் காரணங்கள்.
காரணம் யாறெனினும்..
கடைசியில் பாதிப்பு உனக்கல்லவோ?.

எழுதியவர் : (28-Nov-18, 5:24 pm)
சேர்த்தது : சகி
Tanglish : iru sakkara payanam
பார்வை : 48

மேலே