ராணுவ வீரன்
ஒத்தயில புறப்பட்ட
எல்லயைத்தான் காக்க ,
உசுறின்றி திரும்பிவந்த
நாடே திரும்பி பாக்க,
சுட்டவன் மகிழ்ந்திருப்பான்
எதிரி என்பதால ,
அவனை பெத்தவளோ
நொந்திருப்பா..
என்னைப்போல ஒரு
தாயா இருப்பதால ....
பொட்டிழந்தா பூவிழந்தா
உன்னை மணந்தவள்
விதவை என்று அல்ல,
உனக்கு மாலையிட்டு
திலகமிட்டு இறுதி மரியாதை
ஒன்று செய்ய ..,
நாட்டுக்காக உயிரைவிட்டு
நீ வீர மரணம் கொண்டாய் ,
அவள் இளமை கொன்று ஆசை மரித்து
உயிர்ப்பிணமாய் நின்றாள் .
உன்னை கொன்றவனும்
கொண்டிருப்பான் மனைவியாக ஒருத்தி ,
அவள் நித்தம் நித்தம் செத்திருப்பாள்
உயிரிருந்தும் உன்மரணம் பயந்து .