உனக்காக

உனக்காக
நான் வடித்த
கண்ணீர் துளிகள்,
எனக்காக ஒருமுறை
அழுகிறது!
நீ சிரிக்க,
நான் சொன்ன
நகைச்சுவைகள் எல்லாம்
எனை பார்த்து
சிரிக்கிறது!
உனக்காக
நான் எழுதிய
கவிதைகள் எல்லாம்
எனக்காக
சோக கவிதை
தீட்டுகிறது!
ஆனால்,
உனக்காக துடித்த
என் இதயம் மட்டும்,
இன்னும்
உனக்காகவே துடிக்கிறது!