பாசத்தலைவியே

தட்டுத்தடுமாறச் செய்த தானே புயலே
அட்டிகை ஒட்டி வச்ச பட்டு நிலவே
கட்டுக்கடங்கா ஆசை கொண்டேன் உன் மேலே
காதல் வெற்றி கொடி நாட்ட வாடி என் கூடே

வெற்றிலைக் கூடச் சேர்ந்த வெள்ளை சுண்ணம்பே
அன்றில் பறவைப் போல வந்தேன் பின்னாலே
மண்டியைப் போல வைத்தேன் மனசை உன் மேலே
உண்டியல் போன்ற மனதில் உள்ளே வருவாயோ

தன்னிலை மறக்கச் செய்யும் தங்க தாமரையே
பன்னென்னும் பாட்டில் நீதான் பாசத்தலைவியடி
கண்ணென்னும் குகைக்குள் உன்னை கட்டிவிட்டேனடி
பெண்ணே என்னை எந்நாளும் பிரியக் கூடாதே
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (1-Dec-18, 8:57 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 190

மேலே