ஏம்ப்பா நான் மலையா

ஏம்ப்பா, நான் மலையா?
@@@@@
ஏன்டா கண்ணு இப்பிடி கேக்கற?
@@@@
நான் ஒல்லியாத்தானே இருக்கிறேன்? தம்பியும் என்ன மாதிரி ஒல்லியத்தானே இருக்கிறான்?
@@@@
அதில்லென்னடா சந்தேகம் உனக்கு?
@@@
சரி எம் பேரையும் தம்பி பேரையும் சொல்லுங்க?
@@@@
ஏன்டா கண்ணு உம் பேரும் உந் தம்பி பேரும் உங்க ரண்டு பேருக்கும் மறந்து போச்சா?
@@@@
மறக்கல அப்பா. நான் ஒரு விசயத்தைச் சொல்ல வர்றேன். எங்க பேருங்களச் சொல்லுங்க?
@@@@
நம்ம குடும்ப சோசியர், எண் கணித சோசியர், வாசுத்து பார்த்துச் சொல்லறவரு இவுங்களை எல்லாம் கேட்டு நீங்க ரண்டு பேரும் பொறந்த நேரம், ராசிப்படி உனக்கு 'கிரி'-ன்னு பேரு வச்சோம். உந் தம்பிக்கு 'கிரிராஜ்' -ன்னு பேரு வச்சோம்.
@@@@
அதுதாம்ப்பா ஒரு பிரச்சனையே! எங்க பள்ளிக்குப் புதுசா ஒரு தமிழாசிரியர் வந்திருக்கிறாரு. அவரு இந்தியும் படிச்சவரு. எங்க வகுப்பில உள்ள ஒரு பையன் பேரு கூட தமிழ்ப் பேரு இல்ல. எல்லாரோட பேருங்களும் இந்திப் பேருங்க. எங்க புதுத் தமிழாசிரியர் எங்களோட பேருங்களுக்கெல்லாம் தமிழ் அர்த்தம் சொன்னாரு.
@@@
சரி உங்க ரண்டு பேருங்களுக்கும் என்ன அர்த்தம் சொன்னாரு?
@@@@
'கிரி'-ன்னா 'மலை' யாம். 'கிரிராஜ்' -ன்னா 'மலையரசன்'-னாம். அவரு பேருங்களுக்கு அர்த்தம் சொன்னதுக்கப்பறம் என்னையும் தம்பியையும் பாக்கறபோதெல்லாம் "பெரிய மலையும் சின்ன மலையும் வருதுடோய்' -ன்னு பசங்கள் எங்களக் கிண்டல் பண்ணறாங்கப்பா.
@@@@
இந்திப் பேருங்களை வைக்கறதுதான் தற்கால தமிழரின் நாகரிகம். இதுகூடத் தெரியாத அந்தத் தமிழாசிரியர் பாடம் நடத்தினா நீங்க எல்லாம் எப்படி உருப்படப் போறீங்களோ? ஆண்டவன் தான் உங்களக் காப்பாத்தணும்.
@@@
???????
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*சிரிக்க அல்ல* *சிந்திக்க*

எழுதியவர் : மலர் (2-Dec-18, 10:22 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 192

மேலே