அகிலத்திற்கு கேடானவர்

ஏழை நிறத்தானின்
மேதை கருத்தெல்லாம்
கீதை போல் என்றாலும்
பாதை மாற்றுகின்ற
பகுத்தறிவு கருத்துகளை
பணக்கார மானிடர்கள்
பாராமுகம் காட்டுகின்றர்
நாளை நடப்பதை நீ
நன்றாய் கணித்தாலும்
நயவஞ்சக சூழ்ச்சியுடன்
நலத்தினை கெடுத்து வைப்பர்
அப்பப்பா அவர்களெல்லாம்
அகிலத்திற்கு கேடுதானே
நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (2-Dec-18, 11:52 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 50

மேலே