மாமா நீ வருவாயோ
பார்த்த முதல் நாளே,
பரிகொடுத்தேன் என் மனதை என்றாய் !
பார்க்காமல் நீ சென்றதாலே,
பழகணும் போல் உன்னிடம் இருந்தது என்றாய்!
பயமாய் இருக்கிறது என்றேன்,
பயப்படாதே குட்டிமா மாமா இருக்கேன் என்றாய்!
பாசமாய் நீ சொன்னதாலே,
பரிகொடுத்தேன் என் மனதை!
பாசத்தை மட்டும் தந்துவிட்டு,
நேசித்த என்னை நினைக்க மறந்து விட்டாயோ!
பரிதவித்து நிற்கிறேன்,
பார்க்க மதியின்றி போனாயோ!
பாறையில் விதைத்த விதைபோல்
வேரூன்றி விட்டதடா உன் நினைவுகள் !
பதித்த உன் ஞாபகங்களை,
நிஜமாக்க, மாமா நீ வருவாயோ!