ஊதாப்பூக்கள்

ஊதாப்பூக்கள்
**********************

வழமை போலவே அன்றும் வேலை ஆரம்பித்திருந்தது ஆனால்
கிருபா வேலை செய்யும் நிறுவனத்தில் வழமைக்கு மாறாக மகளின் சிந்தனையில் மூழ்கி இப்படியே அவசரமாக உலகம் ஓட்டிக்கொண்டே இருக்கிறதே எப்படி எல்லாத்தையும் சாமளிப்பது அடக்கடவுளே
தன்னை மறந்து சிந்தனையில் மூழ்கி இருந்தவேளை .
முதலாளியும் ஒரு அவசரத்தேவைக்காக தனது உதவியாளரை அனுப்பி
கிருபாவை அழைக்க கிருபாவும் குழம்பிய நிலையில் முதலாளியின்
அறைக்கு செல்ல கிருபாவின் முதலாளியும் கிருபாவின் நிலையை பார்த்துவிட்டு என்னப்பா கிருபா என்னாச்சு வேலையையும் செய்யாமல் என்னடா யோசனை உனக்கு
இன்றைக்கு மனம் சரியில்லை என்றால் இன்று போயிட்டு நாளை வாடா என்று நிதானமாக சொல்ல கிருபாவும்
மோட்டார் வாகனத்தை அவசரமாக எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். அங்கே அவனுடைய மகள் ரோஜா ஏன் அப்பா இன்றைக்கு விரைவாக வீட்டிக்கு வந்து விட்டீர்கள் என்று அப்பாவை கட்டிபிடித்தவண்ணம்
கொஞ்சினாள். அப்போது கிருபாவும் மனம் தளர்ந்து கண்ணீர் சிந்த
சமையல் வேலையிலே நின்றிருந்த மனைவிக்கும் கணவரின் குரல் கேட்க என்னப்பா வந்ததும் வராததுமாய் பிள்ளையோடு கதைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குளித்து விட்டு வாங்க
சாப்பிட்டுவிட்டு பொழுதுபடுவதற்கு முன்னர் போய் வருவோம் என்று கூறவும்
மகள் எங்க போகப் போறோம் அப்பா சொல்லுங்கோ என்று கேட்டகவும்
செல்லமே அப்பா குளித்து விட்டு வந்து சொல்லுறேன் நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று கூறிவிட்டு சென்றான் பின்னர் அனைவரும் ஆயத்தமாகி கிருபாவின் கிராமத்திற்கு சென்றனர்.
அங்கே தனது சிறுவயது தோழிகள் தன்னுடைய பாட்டி என சொந்தம்
அனைவரும் தனது பிறந்தநாளை கொண்டாட ஊதாப்பூக்கள் போல
ஆனந்தமாய் இருப்பதைக் கண்ட ரோஜா ஊதாப்பூப்போல சந்தோசத்தால் முகம் சிவந்து கொண்டாள்.

அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (8-Dec-18, 11:10 pm)
பார்வை : 175

மேலே