மூர்ச்சையற்ற_பொழுதுகள்_பகுதி_26

மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி - 26

பொழுது புலர்ந்தது..
அதிகாலை பகலவன் இன்னும் தன் ஒளியை உமிழாமல் உறங்கி கொண்டிருந்தான்..
உறங்கி கொண்டிருந்த கார்த்திக் எழுந்து வாயில் தண்ணீர் ஊற்றி உமிழ்ந்து கொண்டிருந்தான்..
எண்ணெய் குளியலுக்கு தயாராகும் விதமாக வெந்நீர் சூடேறி கொண்டிருந்தது ..
தூரத்தில் பட்டாசின் ஒலிகள் அவன் காதை கடந்து காற்றில் கலந்து கொண்டிருக்க..பக்கத்தில் இருந்த கோவிலில் இருந்து பக்தி பாட்டு அவன் மனதை மென்மையாக்கி கொண்டிருந்தது..

குளித்து முடித்து புத்தாடை அணிந்து கடவுளை துதித்து விட்டு வீட்டில் அமர்ந்திருந்தான்..வடை முறுக்கு சீடை பட்சி என ஒவ்வொன்றும் பசியை தூண்டியது...சில பதார்த்தங்களை யதார்த்தமாக கொறித்து கொண்டிருக்கும் பொது சலீமின் யாபகம் வந்தது..என்ன மச்சியை காணும்..அவனுக்கு இந்த பதார்த்தங்களும் ரொம்ப பிடிக்குமே ..ஏன் இன்னும் வரலை என்று நினைத்தவாரே எழுந்து வெளியே வந்தான்..சைக்கிளை எடுத்து கொண்டு அவன் வீட்டுக்கு போயிட்டு அப்படியே அவனை கூப்பிட்டுக்கிட்டு மாலதி வீட்டு வரைக்கும் போய் ஒருமுறை பார்த்துட்டு வந்துருவோம் ....இன்னைக்கு அவ என்ன புது டிரஸ் போட்டு இருப்பா..அவளை கலர் ட்ரெஸ்ஸில் பார்த்து ரொம்ப நாட்கள் இருக்கும்
இன்னைக்கு அவ ரொம்ப அழகா இருப்பா..அப்படியே வீட்டு வாசலில் அவ நின்னா சும்மா ஒரு விஷ் பண்ணிரலாமே என நினைத்தவாறு சைக்கிளை மிதிக்க தொடங்கினான்...

எதிரில் சலீம் பதைபதைப்புடன் ஓடி வந்தான் ...என்னடா இப்படி ஓடி வர..நான்தான் நீ வீட்டுக்கு வரலன்னு சொல்லி தீபாவளி பதார்த்தங்களை எடுத்துட்டு வரேன்..உனக்கு என்ன விட அவசரம் போல என்றவாறு இடைமறித்தான் கார்த்திக்...
டேய் என்னடா பன்னுன..
மாலதி வீட்டுல பெரிய பிரச்னை. இப்போதான் பர்ஹானா வந்து சொல்லிட்டு போகுது ...உன்னை யாருடா க்ரீட்டிங்ஸ் அனுப்ப சொன்னது ..அதுவும் தாஜ் மஹால் வைச்சு...என வார்த்தைகள் முன்னும் பின்னும் முட்டி கொள்ள அவன் சொன்னதும் ..புதிதாய் ஒரு உலக உருண்டை ஒன்று தொண்டையில் இருந்து நெஞ்சை அடைத்தவாறு ஆறு சுவர் உடம்புக்குள் நாலு திசையிலும் தலை கால் புரியாமல் ஒன்றை ஒன்று உதைத்தவாறு உருண்டு கொண்டிருந்ததுக்கு கார்த்திக்குள்..

என்னடா நடந்துச்சு தெளிவா சொல்லு என சலீமை பிடித்து உலுக்கினான் கார்த்திக்..
டேய் நீ அனுப்பிய க்ரீட்டிங்ஸ் மாலதிக்கு பதிலா, அவ அப்பா கைல கிடைச்சு இருக்கு..
அதை பிரிச்சு படிச்சு பார்த்துட்டு யாருனு மாலதி கிட்ட விசாரித்து இருக்கார்..
அவ உன் பேரை மட்டும்தான் தெரியும் வீடுலாம் தெரியாது,அவன் என் friend தான் என்று சொல்லி இருக்கா..
ஆனா அவ அப்பா அதை நம்பலை..உன்னை யாருனு கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்ணிருக்கார்..
மாலதி எனக்கு தெரியாது பர்ஹானாக்கு கூட கார்த்திக்கு தெரியும் னு சொல்லிருக்கு....உடனேயே அவர் பர்ஹானா வீட்டிற்கு வந்து நீ யாரு என்னனு கேட்டு சத்தம் போட்டு இருக்கார் ...
ரொம்ப கெட்ட வார்த்தைல பர்ஹானவை திட்டி இருக்கார்..எல்லாத்துக்கும் அவதான் காரணம்னு....கடைசியா ரொம்ப மிரட்டி கேட்டு இருக்கார் அதனால சலீம் friend தான் அவனை விட்டு கார்த்திக்கை நாளைக்கு உங்க வீட்டுக்கு கூப்பிட்டு வர சொல்லுறேன் னு சொல்லிருக்க ...
அதுக்கு அப்புறம் தான் மாலதி அப்பா அங்க இருந்து போயிருக்கார் என்று விவரித்தான்....சரி நாம நாளைக்கு ஸ்கூல் முடிந்ததும் போய் பார்த்துட்டு வருவோம் இல்லனா பெரிய பிரச்னை ஆகிவிடும் என்று சொல்லி விட்டு கிளம்பினான் சலீம்....

தீப ஒளி திருநாள் கார்த்திக்கின் வாழ்க்கையில் இன்று நெஞ்சில் தீயால் சுட்டது போல இருந்தது ..
பட்டாசு வெடித்து சிதறிய பேப்பர் தாள்களை போல உருக்குலைத்து போயிருந்தான் ..எந்த வம்பு தும்முக்கும் போனதில்லை ..அந்த தெருவிலேயே நல்ல பிள்ளை என்று பெயர் எடுத்து இருந்தான்..இப்போ வீட்டுக்கு தெரிந்து அப்பா அம்மாவுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்து விடுவோமோ என்ற பயம் ஒருபுறம்...இன்னொரு புறம் மாலதிக்கு இப்படி ஒரு சிக்கலை உருவாக்கி விட்டுடோம் என்ற குற்ற உணர்ச்சி அவனை இன்னும் வாட்டியது..
இருத்தலை கொள்ளி எறும்பு போல..இரண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போலவும் உணர்ந்தான் கார்த்திக்..அன்று முழுவதும் ஒரு துளி தண்ணீர் கூட அவனால் குடிக்க அவன் மனம் இடம் தர வில்லை வீட்டுக்கு போக பிடிக்காமல் குளத்து கரை வழியாக காலாற நடந்து பார்த்தான்.மனசு முழுவதும் இறுக்கம் படர்ந்து இதுவரை பிடிக்காத ஒரு மனநோய் அவனை கவ்வ தொடங்கியது..
மெலிதாய் இருள் பரவ தொடங்கியது ...வீட்டுக்கு வந்து யாரிடமும் பேசாமல் படுக்கையில் விழுந்தான்...கார்த்திக்கின் அம்மா அவனை சாப்பிட அழைத்தாள்..நான் நண்பன் வீட்டுல சாப்பிட்டு விட்டேன் என்று பொய் சொல்லி விட்டு உணவை வெறுத்து உறக்கம் வெறுத்து முடிவில் அவனையே வெறுத்து எப்போது தூங்கினான் என தெரியவில்லை....மறுநாள் விடிந்ததும் வழக்கத்திற்கு மாறாக அதிகாலை ஆறு மணிக்கே ஸ்கூல் புறப்பட்டு சென்றான்..
யார் கண்ணிலும் படாமல் செல்ல அவனை துரத்தியது அந்த நாள் ..

காலை எட்டு முப்பது இருக்கும் சரவணன் கடைசி பஸ்ஸில் வந்தவன் நேராக கார்த்திக்கிடம் வந்தான்..கார்த்திக் உன்னை பார்க்க மாலதி அப்பா வந்து இருக்கார் ..ஸ்கூல் க்கு வெளியே நிக்கிறார் ..உன்ன வர சொன்னார் என சொல்லவும் கார்த்திக்கிற்கு இன்னும் பதற்றம் அதிகமானது..
நில்லு..கழுத்துல இருக்குற செயினை கழட்டிட்டு போ ..அத பார்த்த ரவுடி பய மாதிரி இருக்குனு நினைச்சுக்குவார் என்ற சரவணன் சொல்லவும்.விரல்கள் கொக்கியை விடுவிக்க முன்னேறியது ..அவனுடைய அவசரத்திற்கு அது செவி சாய்க்க வில்லை ...கீழே படிகளை தாண்டியதும் மாலதியின் அப்பா முகம் ஒரு ஜீப்பின் கதவுகளுக்கு பின்னால் மெதுவாய் வெளிய தெரிந்தது..விரல்கள் செயினை கழட்ட முடியாமல் பதறவும்,கையோடு சேர்த்து அறுத்து பாக்கெட்டில் போட்டு கொண்டு அருகில் செல்லவும் சரியாக இருந்தது..

நீதான் என் பொண்ணுக்கு அத அனுப்பினியா என்று கேட்டார்..
கார்த்திக் தலை குனிந்தவாறு ஆம் என்றான்..
எதுக்கு என் புள்ளைக்கு இத அனுப்பின என்று கையில் வைத்திருந்த கிரேட்டிங்க்ஸை காட்டி கேட்டார்..
friend க்கு தீபாவளி வாழ்த்து சொல்ல ..
அப்படியா இத படி என்றவாறு அவர் கையில் வைத்து கொண்டு படிக்க சொல்லி அதட்டினார்.
அவரின் முகம் கோபத்தில் சிவந்து,கைகள் முறுக்கி கொண்டு இருந்தது..

எனது ஆருயிர் மாலதிக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்..

பிகாஷோவின் தூரிகைகள் துயில் கொள்ளும் போது,
நீ துயில் கலைந்து உன்னை நீயே தீட்டிய ஓவியமடி..
உலகில் அழகான நூறு பொருட்களை
அடுத்தடுத்து வரிசை படுத்த சொன்னாய்.
நூறு முறையும் உன் பெயரைத்தான் முன்மொழிவேன் என உனக்கு தெரியத்தோடி..
தூவானமும்,மஞ்சள் வெயிலும்,
கடற்கரை ஒற்றை படகும்,
பாதையெங்கும் படந்திருக்கும் குறிஞ்சி மலரும் 
உன் பாதங்கள் தீண்ட தவங் கொள்வதை என்னிடம் தூதுவிட்டு சொன்னதை நீ அறிவாயோயடி..
கும்மிருட்டில் உயிர்த்தெழுந்த மின்மினிபூச்சி போல,
என் இருள் தேசத்தில் என்னையே ஒளியாக்கி சென்றாயடி...
கொடியில் பூத்த கோடி மலர்களை,
உன் பூங் கையால் குழைத்து,
எனக்காய் அன்பெனும் சுகந்தத்தை கொடையாய் கொடுத்தாயடி..
நூலிழை கயிறுமின்றி,
ஒய்யார கிளையுமின்றி,
ஆகாய ஊஞ்சலில் உற்சவம் பயணம் போல்,
என்னுள் வந்து பிரமிப்பூட்டினாயடி..
உனக்கென நான் என்ன செய்தேனடி
என்னையே நான் தருவதை தவிர ஏதும் உண்டா சொல்லடி...

உன்னை மீண்டும் பார்க்கும் போது
நான் மீண்டும் மீண்டு புதிதாய் பிறந்தேனடி ..

ஐ மிஸ் யூ மாலதி ...

என்று படித்து முடித்ததும் சட்டையை கொத்தாய் பிடித்து இழுத்தபடி பள்ளிக்குள் நுழைய ஆயுத்தமானார் மாலதியின் அப்பா...
உன்னோட படிப்பு இன்னையோட முடிஞ்சுதுடா ..என்னை யாருனு நினைச்சுகிட்டு ஊருல உள்ள போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டு பாரு என்ன பத்தி..மிலிட்டரிக்காரன் பொண்ணுக்கிட்டயே நீ லவ் லெட்டர் கொடுகுறியா...
கடைசில ஐ மிஸ் யூ னு ரத்தத்துல வேற எழுதி வைச்சு இருக்க...
வா உன்னோட ஹெட் மாஸ்டெரா பார்த்து உன்னை என்ன பன்னுதேன் னு பாரு என உறுமியவாறு பள்ளிக்குள் நுழைந்தார்...
சார் சார் தெரியாம அனுப்பிட்டேன் சார் ..ஹெட் மாஸ்டர் கிட்ட வேணாம் சார் ..நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்..உங்க காலுலனாலும் விழுறேன் என் படிப்பை வம்பாகிராதிங்க சார் என அழுதபடி அவரின் கைகளுக்குள் சிக்கிய சிறு குருவி போல கந்தலாகி போயிருந்தான் கார்த்திக்...

ஹெட் மாஸ்டர் ஹனிபா சாரின் ரூம்குள் நுழைந்தார் மாலதியின் அப்பா..ஹனிபா சார்தான் கார்த்திக்கின் ஆங்கில வாத்தியார்..
கார்த்திக்கின் நெஞ்சுக்குள் துடித்த இதயம்,பயத்தில் வெளியே குதித்து ஓடி விட துணிந்தது...அன்றைய நாள் மாலை இன்னும் கொடூரமாய் இருக்கும் என்பது கார்த்திக் அறிந்திருக்க வில்லை...

ஹனிபா சார்..
மாலதியின் அப்பா..
கார்த்திக்..
சரவணன்
நன்கு பேரும் அந்த ரூம்குள் நின்றனர்..
நான்கு சுவரும் அவர்களை மறைத்து கொண்டு கதவை மூடியது...

நீங்க யாரு ..அவன் சட்டையில் இருந்து கைய எடுங்க இல்லனா பள்ளியில் அத்துமீறி என் ஸ்டுடென்ட் ஆஹ் அடிச்ச னு சொல்லி போலீஸ்ல காம்ப்லின்ட் கொடுப்பேன்..நீ எத இருந்தாலும் சாயங்காலம் பள்ளி முடிஞ்சதும் வெளிய போய் பேசிக்கோ என ஹனிபா வாத்தியார் சொன்னதும்...
கார்த்திக்கை பார்த்து நீ சாயங்காலம் என் வீட்டுக்கு வர என்ற கோபதோடு சொல்லிவிட்டு வெளியேறினார்..

கார்த்திக் என்ன பிரச்னை எதுக்கு அந்த ஆளு உன்னை அடிக்குற அளவுக்கு வைச்சுக்கிற..படிக்கிற பையனுக்கு இது தேவை இல்லாதது...இந்த வயசுல இது சகஜம்தான் ஆனா அதுக்கு படிப்பை கெடுத்துற கூடாது...போ பார்த்து நடந்தோக்கோ ..நான்லாம் இத கடந்த்தான் வந்து இருக்கேன் என்ற தோளில் தட்டியவாறு வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்..
கார்த்திக் கண் கலங்கி அவருக்கு நன்றி சொல்லி விட்டு வகுப்பிற்கு சென்றான்...
அப்போது இடை தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது...அதுவும் அன்று சனி கிழமை ..அரை மனதோடு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தான்..கார்த்திக் இன்று இரண்டாவது நாளாய் எதுவும் சாப்பிட வில்லை ..
மாலை மூன்று மணி இருக்கும்...சலீம் கார்த்திக்கின் வீட்டுக்கு வந்தான்..இருவரும் நடந்து மாலதியின் வீட்டிற்கு சென்றனர்...
அப்போது மாலதிக்கு மிகவும் பிடித்த ஆரஞ்சு கலரில் சட்டை போட்டு இருந்தான் கார்த்திக்..

மாலதியின் வீட்டு படியை தாண்டி உள்ளே சென்றதும் ..அவளின் பாட்டி கேட் கதவை மூடும் சப்தம் ஒலித்தது..
முதல் ரூம் அவளின் ஸ்கூல் யூனிபோர்மும் ஒரு புர்காவும் கிடந்தது..கார்த்திக்கும் சலீமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..அடுத்த ரூம் ஆஹ் கடந்து சென்றனர்..
அங்கு பர்ஹானவும் ஜெனிபரும் நின்று கொண்டிருந்தனர் ..இவர்கள் எதுக்கு இங்கு வந்தார்கள் என்று இன்னும் திகைப்பை கொடுத்தது...
அந்த ரூம்குள் செல்ல கீழிருந்து அண்ணார்ந்து பார்த்தான் கார்த்திக்...
மாலதியின் கண்களிலில் கண்ணீர் முட்டி கொண்டு அந்த ரூமில் இருந்து கார்த்திகை பார்த்தவாறு கடந்து மற்றொரு ரூமிற்கு சென்றாள்..அவள் கடக்கும் போது பார்த்த பார்வையில் அந்த நிமிடமே செத்து போயிரலாம் போலிருந்தது அவனுக்கு...அவ்வளவு வலிகளை கண்ணில் காட்டி விட்டு சென்றாள்.அதே கண்களில் காதலும் தழும்பி நின்றதை கார்த்திக்கின் கண்கள் கண்டு கொண்டது ..

அந்த ஐந்து வினாடி காதல் பரிமாற்றத்தையும் அந்த ஒரு குரல் சிதைத்தது ...

மாலதியின் அப்பா கார்த்திக்கின் முன்னாள் வந்து நின்றார் ..

அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது...

தொடரும்....

எழுதியவர் : சையது சேக் (8-Dec-18, 8:41 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 194

மேலே