புத்தகம் என்னவள்

புத்தம்புது புத்தகமடி பெண்ணே
நீ எனக்கு , நான் புரட்டிப் பார்க்கும்
இதழ்கள் எல்லாம் உந்தன் அங்கமதின்
அழகு, அழகு, அழகு என்று மயங்கினேன் நான்
கரும்பாலையில் சுவைக்கவந்த ஈபோல் நான்,
* புத்தகமே உந்தன் இதழ்கள்* ஒன்றில் நான்
மீண்டுவர மனமில்லாது கிடக்க, உந்தன்
செவ்விதழ் மலர்ந்து நீ சிரிக்க, விரிய
புத்தகமே உன்னை மூடிவிட்டேன்
என் அணைப்பில் நீ என்னவளே.
விரிந்த உன் இதழகளை காத்திருக்கும்
என் இதள்கள்மேல் மூடிவிட மாட்டாயா

( * புத்தகம்: என்னவள்; இதழ்கள் : அவள் அங்கம் இங்கு விரிந்த
அவள் அதரம்).

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Dec-18, 8:30 pm)
Tanglish : puththagam ennaval
பார்வை : 108

மேலே