மின்வெட்டு...
![](https://eluthu.com/images/loading.gif)
வாய் திறக்காத தொலைக்காட்சி,
அணைந்து போன கைபேசிகள்,
வாய்ப்பு தந்தது வீட்டில் நாங்கள் இணைந்து பேச,
வெளிக்காற்றில்
முகம் மலர்ந்து பேச,
விண்வெளியை சற்று வேடிக்கை பார்க்க,
மனபாரங்கள் உண்மையாய் குறைந்து போக.....
பல நாட்கள் பல வெளிச்சங்கள் தராத இவ்வின்பங்களை,
இந்த இருள் தந்துவிட்டது...