என்னுரை
என்னுரை
வணக்கம்
அனு பேசறேன். அங்கங்க ஏற்படுற பஞ்சாயத்தில் .. ஒண்ணு ரெண்டு முறை என்னைப்பத்திப் பேசுனதைத் தவிர, என்னைப்பத்தி பேசிப் பழக்கம் இல்லை,
என்னைப் பத்தி யோசிச்சும் பழக்கம் கிடையாது.
வாத்தியாருக்கு பயப்பட்ட குழந்தைப்போல
முழிக்க வச்சிட்டாரு என்னை தசரதன் ராஜி.
இலக்கணம் இலக்கியம் இதெல்லாம் எழுதத்
தொடங்கணும்னுச் சொல்லி வாசிக்கத் தொடங்கியது இல்லை.. அப்பாவுக்கு வாசிப்பில் பிடித்தம் அதிகம் அவர் ஒரு என்சைக்ளோபிடியா ன்னு சொல்லுவேன்
அவர் நினைவாதான் இன்னும் வீட்டில்
இருக்கும் நூலகம் .. அவர் டைரியை வாசித்துதான் ஆங்கில எழுத்தில் ஈடுப்பாடு
அதிகமாகிற்று .. நா தமிழ் கத்துகிட்டதே
வளர்ந்து பத்தாம்பு போனப்பறந்தான்.
வாசிப்பு
ஏதோ கட்டாந்தரையில், எறும்புக் கூட்டம்,
எதையோத் தேடிக்கிட்டு ஊறுவதைப்போல,
வளர்ந்தநிலா நடந்துபோறப்போ எல்லாம்
நம் கூடவே வருவதாகப் புலப்படும் ப்ராந்தம் போல, நாசிக்குப் பழக்கப்பட்டுவிட்ட வாசனைகள் போல, அருகிலிருந்தும் ஆசைகள் விலகினப் போல, ஆர்ப்பரித்தும்
எட்டிடாத உயரங்களைப்போல, முடிவில்லாத கனவுகள் போல.. குளிர் நாட்களில்
இயங்கவே முடியாத படுக்கையின் அணைப்பினைப் போல, ஒரு இலக்கு பல தொடர்தலின் பயணம்போல..
பூப்படைந்தகணம் பெண்ணின் முதல்
வெட்கம் போல மென்வலிகளுடன்
வாசிப்பு கனிமையுற்றிருத்தல்
இன்றியமையாமை
நான் எழுத்தனல்ல, கவிஞன் அல்ல
சுமைகளையும் பிழைகளையும்
சுமந்தூறும் சராசரி பிழைஞன்
அவ்வப்போது,
வெள்ளைச் சுவற்றில்
சிலவற்றை உமிழும் கிறுக்கன்
அந்த வர்ணங்களுக்கு
விளம்பரங்கள் வேண்டாம்
எல்லைகள் வேண்டாம்
சிலச்சமயம்
அவை கெளரவம் இழக்கலாம்
பழிகளுக்கு ஆளாகலாம்
கனவுகளுக்கு விலைப்போகலாம்
கடந்துபோகும் யாரோ சிலரை
மகிழவைக்கும் விபச்சாரியாகலாம்
எழுத்தர் கவி என்று சொல்பவர்களுக்கு
உங்கள் எழுத்துகளில்
கெளரவம் இருக்கட்டும்
வரிகளில் எல்லை இருக்கட்டும்
விளம்பரங்கள் கைக்கொடுக்கட்டும்
உங்கள் படைப்புகள் என்னைக் கிளர்ச்சியுறச்செய்யும்,
நிறைய எழுதுங்கள்
என்னும் கூட்டத்தில் நானில்லை
இடைவெளி எடுத்து எழுதுங்கள்
இடைவெளிகள் நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும்.. தொடர்ப் பயணங்களினால்
கிடைக்கும் வலி மற்றும் அனுபவங்களைவிட
இடைவெளிகள் கற்றுக் கொடுக்கும் வலி, அனுபவங்களுக்கு வலிமை அதிகம் என்கிறேன்.
எத்தனையோ நிறைய எழுதிக் குவித்தவர்கள்
எங்கோக் காணாமல் சென்றுவிட்டார்கள்..
நிமிர்ந்த எழுத்துகளைக் கொடுத்தவர்களே
நெஞ்சை என்றும் வருடுகின்றார்கள்
அதுபோல நீங்களும் நிலைக்கவேண்டுமென்பது
என் பேரவா
அனுசரன்