கண்ணம்மாவின் காதலன்

செந்தமிழில் சொல்லெடுத்து
பாட்டிசைத்து - வண்ணப் பைங்குயிலொன்றை தூதுவிட்டு,
சந்தம்பாடி
காதல்சொல்லியவன்...
அந்தி வானில்- அந்தவானவில்லின் வண்ணங்கொண்டு
தூவானத்தூவலில்
தூரிகைக்கொண்டு- பண்பாடு சொல்லியவன்....
கற்பனைப்புரவியில்
கானகத்தின்
கடைக்கோடிக்குச்சென்று
காதலைச்சொன்னவன்...
அடிவான விடிவெள்ளியாய்
ஆசைகள்; ஆயிரமாயிரம்கொண்டு
அன்பைச்சொல்லியவன்....
மரணிக்காத மரணம் -இவனுக்கு,
புதைக்கப்படாத இவனின் கனவுகள் -புதுத்தெம்பு
ஊட்டியது...
இவனின்
வார்த்தைகள் கனவுகளல்ல -காவியச்சுவடிகள்....
விதைக்கப்பட்ட விதையாய்,
விடியலின் விண்மீனாய்,
வித்தியாசத்தின் எழுச்சியாய்,
தொடக்கக்கத்தின் தூண்டுகோலாய் ,
தமிழின் தலைமகனாய்,
குயிலியின் காதலனாய்,
கற்பனைக்கெட்டா நினைவாய்,
இந்த "கண்ணம்மாவின் தீராக்காதலனாய்"
யுகம் தாண்டிய பறவையாய்,
என்றென்றும் வாழும்-என் பாரதிக்கு; பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....

எழுதியவர் : இரா.சுடர்விழி (11-Dec-18, 9:24 am)
பார்வை : 183

மேலே