நவனீதாண்டே நாக்கு ப்ராணம்

நவனீதாண்டே நாக்கு ப்ராணம்
(Navaneetha ante nakku praanam)

//ஒருப் பெண்ணை உண்மையா நேசிச்சவனால .. எந்தப் பெண்ணோட நேசத்தையும் வெறுக்கமுடியாது .. தன் மனைவி உட்பட ம்ம் ///

மேல சொன்னது அல்ல டாபிக் .. அதை ஒருத்தி சொல்லிக் கொடுத்துட்டு செத்துப்போய்ட்டா

நவனீதாண்டே நாக்கு ப்ராணம்

கொஞ்சநேரம் அவப்பக்கத்துல உக்காந்து
அவ சொல்றதை செவி கொடுத்து கேக்கணும்.. வீட்ல எல்லோரும் இருந்தாலும்
அவ அழைக்கிறப்போ அவகூட சேந்து
கொஞ்சதூரம் நடக்கணும் . எல்லோருக்கும்
கொடுக்கிற முக்கியத் துவத்திற்கிடையில
அவளோட தேவைகளை புரிஞ்சுக்கணும்
செய்துக் கொடுக்கணும் .. நம்ம வீட்ல எல்லோரும் அவளைப் புரிஞ்சுப்பாங்களா இல்லையான்றது அவளோட கேள்வி இல்லை
நா அவளை உணருறேனா என்பதையே
அவக் கண்கள் கேட்டுக் கொண்டிருக்கும்..
யாரோக் கேட்கிறக் கேள்விகளுக்கு அக்கண்கள் என்னிடமே பதில் தேடும்..
ஆமா கைப்புடிச்ச நாள் ல இருந்து கொஞ்சகாலம் அவளுக்கு நல்ல நண்பனா
இருந்திருக்கேன்.. எதார்த்தங்களை ஒவ்வொன்றாய் பழக்கியிருக்கிறேன்.. அதனால்தான் அவள்மேல் யாராலும் தொடுக்கப்படும் கணைகளுக்கு அக்கண்களால் என்னிடம் பதில்தேடும்
பொட்டிப் பெண் அவ ம்
என்னுடைய ஒருநொடி விழி மிரட்சிக் கூட
அவளை அத்தனைக் கலங்கடித்துவிடும்
கேவிக் கேவி அழச்சொல்லும்
அறிவேன்.. இதுவரையும் அப்படி நேரிடவே இல்லை .. இனிமேலுமில்லை ம்ம்

//நவனீதாண்டே நாக்கு ப்ராணம் //

என் மனைவி அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவா.. கேட்டதும் கிடைக்கும் எதுவோ,
அல்லது தானாக கிடைக்கும் எதைப் பற்றியோ
ஆரம்பத்தில் இருக்கும் ப்ரியங்கள் நாள் போக்கில் அற்றுப் போகும் ன்னு,
உதாரணம் காதல் கல்யாணம் குழந்தை பாக்கியம் ன்னு எல்லாமே அப்பாப்போ கேட்டோ கேக்காமையோ அமைஞ்சிடும்போது
காலப்போக்கில் .. சில அக்கரையின்மை
அவற்றின் மேல் படிந்துவிடும்.. எதுவும்
கிடைக்கக் கடினப் பட்டிருந்தாலே அதனுடைய
அருமைப் புரியும் .. ஆமா அதுதான் உண்மையும் கூட ம்ம் .. அவளை நான் அப்போவும் சரி இப்போவும் சரி எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு சொல்ல வார்த்தைகளே இல்லை .. நிறைய காதல்களைக் கடந்தவன் நான் ... அவ கூப்பிட்ட வார்த்தைக்கு எல்லாத்தையும் தூக்கிப்போட்டு போயிடும் அளவுக்கு பிடிக்கும் ..... என்னோட அன்பு தவமிருந்து கிடைச்சதா சொல்லும்போதெல்லாம் .. அத்தனை அன்பையும் கொட்டித் தர இத்தனைக் காலமும் சுமந்திருப்பது ஒரு தவம் தா‌னே
நா வர்றதுக்கு ஒரு நாலு நாளைக்கு முந்தி அவளுக்கு தொடர் இருமல் .. வீட்ல என்னைப் பார்க்க கூட்டம் .. எனக்கும் உடம்பு சரியில்லை அப்போ ம்.. ஆனா அவ கிட்சன் ல இருந்து இருமும் போது என்னால ஏதும் செய்யாம இருக்க முடியல . கிட்சனும்கு எழுந்து போயி அவக்கூட சேர்ந்து எல்லாவேலையும் முடிச்சிட்டு .. ஏதும் பேசாம .. ப்ரொவிசன்ஸ் வாங்கப் போரோம்னு சொல்லிட்டு ஹாஸ்பிடல் கூட்டிகிட்டுப் போனேன் ..
டாக்டர் ரெண்டுநாள் சுடுத்தண்ணியில ஆவி புடிக்கணும் .. வீசிங் இருக்கு ன்னு சொன்னாரு மேலும் வீசிங் கூட ஹெவி டெம்பரேச்சர் இருந்திருந்தா.. பன்றிக் காய்ச்சல் வந்திடும்
ஸோ நல்லப்படியா பார்த்துக்கோங்க ன்னு சொன்னப்போ .. எனக்கு அதிகம் மனக்கஷ்டமாகிடுச்சு..
வீட்ல இருக்கிற கெஸ்ட் மனசும் நோகாம இருக்கணுமே .. அவங்க வாற நாளன்னைக்கு
இப்படின்னு யாரும் நினைச்சுடக் கூடாதேங்கிறது அவளோட எண்ணம் ..
அவ வீட்ல நடமாடிக்கிட்டு .. சிரிச்சி பேசிக்கிட்டும் இருக்கும்போதுதான்
வீடே வீடா இருக்கும்...நா இருக்கும்போது
அவ ஒருநாள் வீட்ல இல்லேன்னாக் கூட
வீடு வீடா இருக்காது... போ ன்னு சொல்லி அனுப்பிவச்சிட்டு பின்னாடியேப் போயி கூட்டிக்கிட்டு வந்திடுவேன்.. . எங்கப்பா சொன்னது‌ ஞாபகம் வந்துச்சு.. வீட்டு மருமகதான் மகாலக்‌ஷ்மி ன்னு சொல்லுவாரு.
அவ சுருசுருப்பா நடமாடும்போதுதான்
வீடு கலகலன்னு இருக்கும்..
அதுதான் அவக்கிட்ட எனக்கும் புடிக்கும்.

அன்னையிலிருந்து நாலு ராத்திரிகள்
எல்லோரும் தூங்கிட்டப்பிறகு .. அவளும் நானும் மாடி ரூம்ல இருந்தோம் ..
அவளுக்கு ராத்திரி, ரெண்டு மணிகளுக் கொருமுறைப்போல தண்ணி கொதிக்கவச்சி .. ஆவிப் பிடிக்க எழுப்புவேன் .. ஒரு சுக்குக்காப்பியும் போட்டுக் கொடுப்பேன் ..

முன்ன சொன்னதுப்போல
நிறையக் காதல்களை கடந்தவன்தான் நான்
முதல் காதல் மண்ணைவிட்டு மறைந்தபோது
அந்தக் காதலை என்னை அருகும் எல்லோருக்கும் அளித்திருக்கிறேன் ..
ஆனா எனக்கு யாருமில்லை என
அதுவரை உயிர்த்துறக்க விழையவில்லை ..
ஆனா எனக்குத் தெரியாது ..
என் மனைவி இல்லேன்னா
நா உயிர் வாழுவேனான்னு
அவ இல்லாத உலகத்துல நானும்
என் குழந்தைகளும் இருக்கணுமான்னு தோணும் .. ஏன்னா

நவநீதாண்டே நாக்கு ப்ராணம் ம்ம்
(Navaneetha ante nakku praanam)

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (11-Dec-18, 2:33 pm)
பார்வை : 47

மேலே