மகாகவி

பாரதி பாட்டுக்கொரு தலைவன்
பாரததாயின் புதல்வன்

இத் தரையிலே பிறந்தோர்க்கே
இடித்து வீரத்தை ஊட்டியவன்

காக்கை குருவியையும்
உறவாக்கி பார்த்தவன்

எட்டுத்திக்கும் தமிழை
முரசு கொட்டி சேர்த்தவன்

மாதர்தம் மடமையை
கொளுத்தச் செய்தவன்

ஏட்டில் எழுதிய வார்த்தைகளை
எண்ணத்திலே வடித்தவன்

எண்ணற்ற கவிஞர்களை தன்
எழுத்தால் எழச்செய்தவன்

புரட்சி விதைகளை
மண்ணில் தூவியவன்

புது மாற்றங்களை உருவாக்கிய
மாபெரும் புரட்சியாளன்

வையகம் ஓயும் வரை
வாடாது நின்நினைவு

வணங்குகின்றோம் உம்மை!!!!!

எழுதியவர் : உமாபாரதி (11-Dec-18, 4:01 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : makakavi
பார்வை : 131

மேலே