பாரதி

பாரதத்தின் தீயே
எங்கள் பாரதியே ...

மீசையை முறுக்கினாய்
திசைகளை நொறுக்கினாய்...

உன் பேனாவின் கூர் கொண்டு
ஊருக்கு நீ செய்தாய் பல தொண்டு ...

சாதிகள் இல்லையடி
இதுவே உன் சாட்டையின் கைப்பிடி ...

அடுப்பூதிய பெண்ணியம்
மாறியது உன் புண்ணியம் ...

உன் கவிப்புறாவின் சிறகுகள்
என்றுமே சமத்துவ வானத்தில்
தனித்தே சிறகு விறிக்கிறது...

நீ சொன்ன அக்கினிக்குஞ்சுவின் கருவில்
பல்லாயிரம் கருவுருவாகி
உன் திருவுருவில்
உம் கருத்தியலை
நிச்சயம் காலம் கடத்தும் என நம்புகிறோம் ...

எழுதியவர் : குணா (11-Dec-18, 8:22 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : baarathi
பார்வை : 239

மேலே