என் இறுதிநாள் கடிதம்.....


மடிதாங்கி பெற்று
மனதார வாழ்த்திய
என் அன்பு அன்னையே

சுமையாக நானிருந்தும்
சுகமாக வளர்த்த
என் அன்பு தெய்வமே

உன் அன்பு புரியாமல்
அலை பாயும் வயதோடு
காதலெனும் வஞ்சதிலே
விழுந்தேனே

விழுந்துவிட்டேன்
விழுந்தும் மீள வழி தெரியாமல்
பூமியின் கருவறையிலே
மடிய தயாராகிறேன்

என் கண்ணீர் துளிகள்
நனைக்கும் இந்த காகிதத்தோடு
என் ஆஸ்த்தியையும்
கரைத்துவிடுங்கள்

ஒரு சிறிய வேண்டுகோள்

என் உயிர் பிரியும் போது
என் உடம்பிலே
வெட்டப்பட்ட அவளது பெயரின்
தழும்புகளுக்கு வலிக்காமல்
என்னை எரித்து விடுங்கள்

எழுதியவர் : நந்தி (25-Aug-11, 1:09 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 643

மேலே